மேலும் செய்திகள்
ரூ.40,000 கோடி கடன் வாங்கும் கர்நாடக அரசு
08-Nov-2024
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில், குப்பை அள்ளும் டெண்டரில் 40,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது குறித்து, பா.ஜ., தலைவர் ரமேஷ், லோக் ஆயுக்தாவில் புகார் செய்து உள்ளார்.பெங்களூரில் குப்பை அள்ளுவதில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக, பா.ஜ., தலைவர் ரமேஷ், லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேற்று புகார் செய்தார். 1,570 பக்கம் கொண்ட ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.பின் அவர் அளித்த பேட்டி:குப்பை அள்ளும் டெண்டர் அளித்ததில், பெங்களூரு மாநகராட்சியில் 40,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, முதல்வர் சித்தராமையா உட்பட 33 அமைச்சர்கள் மீதும், நடவடிக்கை எடுக்கும்படி லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளேன்.திடக்கழிவு நிர்வகிப்பு பெயரில், 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழல் நடந்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் மட்டுமின்றி, அரசு தலைமை செயலர், மாநகராட்சி தலைமை கமிஷனர், நிர்வாக அதிகாரி உட்பட அனைத்து ஊழல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளேன்.எந்த உள்ளாட்சிகளிலும், நிர்வாக அதிகாரியின் பதவி காலம் ஆறு மாதங்களை தாண்டக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள் பதவி காலம் முடிந்த ஆறு மாதங்களுக்குள், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வது கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் 2020 செப்டம்பர் 11 முதல், நிர்வாக அதிகாரிகள் ஆட்சியில் மாநகராட்சி செயல்படுகிறது.மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத போது, முக்கியமான முடிவுகள் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் அரசியல் சட்டத்துக்கு எதிராக, முடிவு செய்துள்ளனர்.வார்டுகளில் தினமும் குப்பையை அள்ளும் டெண்டரை, திடக்கழிவு நிர்வகிப்பு திட்டத்தின் கீழ், அயோத்தியா ராமரெட்டி என்பவருக்கு சொந்தமான நிறுவனம் உட்பட நான்கு நிறுவனங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒப்பந்ததாரர்களுக்கு, 40,000 கோடி ரூபாய் வழங்க, அரசு முற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
08-Nov-2024