உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.எம்., ஆபீசுக்கு குண்டு மிரட்டல் விட்டா சும்மா விடுவாங்களா: சேட்டை வாலிபரை தட்டித் துாக்கியது பீஹார் போலீஸ்!

சி.எம்., ஆபீசுக்கு குண்டு மிரட்டல் விட்டா சும்மா விடுவாங்களா: சேட்டை வாலிபரை தட்டித் துாக்கியது பீஹார் போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல் கொய்தா என்ற பெயரில், இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை கோல்கட்டாவில் போலீசார் கைது செய்தனர்.பீஹாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாட்னாவில் அமைந்துள்ள முதல்வர் அலுவலகத்திற்கு அல்கொய்தா பெயரில், கடந்த ஆக.,4ல் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் முதல்வர் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீசார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். இதில், இ-மெயில் மிரட்டல், வெறும் புரளி என்று தெரியவந்தது.

விசாரணை

இந்நிலையில், இமெயில் வாயிலாக மிரட்டல் விடுத்த 51 வயதான நபரை கோல்கட்டாவில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவருக்கு அல் கொய்தா மற்றும் பயங்கரவாத அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. '' மிரட்டல் விடுத்த நபர் கோல்கட்டாவில் உள்ள பவ்பஜார் பகுதியில், பாட்னா போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் இமெயில் அனுப்பிய மொபைல் போனும் மீட்கப்பட்டது என பாட்னா எஸ்.எஸ்.பி ராஜீவ் மிஸ்ரா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை