உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் குடிநீர் இல்லை; ஆல்கஹால் கிடைக்கிறது; பிரதமர் மோடி

டில்லியில் குடிநீர் இல்லை; ஆல்கஹால் கிடைக்கிறது; பிரதமர் மோடி

புதுடில்லி: 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.டில்லி சட்டசபைக்கு, பிப்., 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது; பிப்., 8ல் முடிவுகள் அறிவிக்கப்படும். ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பா.ஜ.,வும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு கட்சிகளை தவிர காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ot3j5b9t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு குறித்து பிரதமர் மோடி ஆடியோ வெளியிட்டுள்ளார்.அந்த ஆடியோவில், அவர் கூறியதாவது: டில்லியில் இலவச சுகாதார சேவைக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் அதை செயல்படுத்த விரும்பவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் பல நன்மைகள் உள்ளன என்று டில்லி மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு தடைகளை உருவாக்கினர்.

முதுகெலும்பு

பா.ஜ., நடுத்தர மக்களை இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதுகிறது. நாட்டில், அனைத்து நவீன வசதிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது. ஆம் ஆத்மி அரசு மீது, மக்கள் வெளிப்படையாக கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள், அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என மக்கள் கேட்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி தினமும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.

மகத்தான வெற்றி

டில்லியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெறுவதை, பா.ஜ., தொண்டர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும். டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு மகத்தான வெற்றியை தொண்டர்கள் உறுதி செய்வார்கள்.பெண்களுக்கு ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. பஞ்சாபில் பெண்களுக்கு மாதம் தோறும் பணம் தருவோம் என ஆம் ஆத்மி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பா.ஜ., அரசு மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஜன 22, 2025 18:46

குஜராத்திலேயே கொஞ்சம் கொஞ்சமா ஆல்கஹால் கிடைக்க ஆரம்பிச்சாச்சு.


அப்பாவி
ஜன 22, 2025 18:44

ஜல்ஜீவன் ஜிந்தாபாத்...


என்றும் இந்தியன்
ஜன 22, 2025 17:53

இங்கே பாருங்க மோடி அவர்களே நீங்க சொல்றது எல்லாம் சரிதான், அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் வெறும் ஏச்சு பேச்சு வேண்டாம். நான் உங்கள் பதவியில் இருந்திருந்தால் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊழல் அம்பலப்படுத்தி அவரை பதவியில் நீக்கிவிட்டு இந்திய குடியுரிமையை பறித்திருப்பேன் அவ்வளவு மோசமான இந்திய எதிர்ப்பு ஆளாக இந்திய நாட்டு மக்களுக்கு பணி செய்ய லாயக்கில்லாத ஒரு கேவல முதல்வராக இருப்பதால்???அப்படி ஏன் செய்யவில்லை????


mothibapu
ஜன 22, 2025 17:25

டில்லியில் தண்ணீர் இல்லை என்று பிரதமருக்கு தெரிய 10 வருடம் ஆகி விட்டது. இனாம் தருவது தவறு என்று சொல்லும் மத்திய அரசு இப்போது டெல்லியில் வாரி வழங்குது எந்த வகையில் சரி. எல்லாம் நாற்காலி செய்யும் மோகம்.


pv,முத்தூர்
ஜன 22, 2025 16:18

நடுத்தர வர்க்கத்தினரே முதுகெலும்பு என்று நீங்கள் கூறியது போல், வருமான வரி என்ற பெயரில் நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை தின்று முதுகெலும்பை உடைக்கிறீர்கள்..... தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்களை மேற்கோள் காட்டி மற்ற நடுத்தர மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?


Chanemougam Ramachandirane
ஜன 22, 2025 16:03

இதே நிலை தான் புதுவையில் சாராயம் பெருக்கெடுத்து ஓடுது புதுவையில் இருந்து தினமும் மது கடத்தல் சட்ட்டம் இருக்கிறது செயல்பாடு தான் இல்லை இங்கும் மத்திய ரசின் சட்டங்களான வாடகை ஆட்டம் கலவி உரிமை சட்டம் லோகிபோல் லோக் அயுக்த உச்ச நீதிமன்ற உத்திரவு இட்டும் செய் யல்படவில்லை ஊடகங்களும் கண்டு கொள்வதில்லை மத்திய உள்துறை பணி என்ன என்று தெரியாமல் கண் கண்டிக்காமல் ஒசலும் நில அபகரிப்பு தொடர்கிறது அதுவும் தேர்தெடுத்த நபர்கள் சிண்டிகேட் வைத்து செய்யப்படுகின்றனர் அதிகாரிகள் அதற்கு துணை புதுவையை சுற்றிஎல்லா சட்டமும் நிறைவேற்றி வி ட்டார்கள் புதுவையில் இல்லை என் பஞ்சாயத்து தேர்தல் கூட வைக்க மத்திய என் என்று கேள்வி கேட்க முன் வ றவில்லை அனால் 3 சட்ட சபை நபரை மட்டும் தேர்தெடுக்க முன் வருகிறது புதுவை கேட்பாரற்று அரசு செயல்படுகிறது


Ravichandran
ஜன 22, 2025 15:53

What we can understand from this is that it is politics that prevents people getting water. Being the capital of India and people wish to elect a Non BJP, this what will happen. Hope everyone understand this and elect BJP this time.


Ramaswamy Jayaraman
ஜன 22, 2025 15:44

இதற்க்கு நீங்கள்தான் காரணம். இந்தியா குடிமகன் எல்லோருக்கும் நீங்கள்தான் பொறுப்பு.


ஆரூர் ரங்
ஜன 22, 2025 15:36

தலைநகரிலேயே மாநிலத் தலைமையைப் பார்த்தே வாக்களிக்கின்றனர். பாரதீய ஜனதா டெல்லியில் உள்ளூர் தலைமையை வளர்க்கத் தவறிவிட்டது.


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2025 15:27

டுமீலு நாட்டுல கூட நீங்க இப்படி பேசல .... நல்லவரே ...... வல்லவரே ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை