உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டி.எச்.எப்.எல்., இயக்குனர் கைது

டி.எச்.எப்.எல்., இயக்குனர் கைது

புதுடில்லி,வங்கிகளில், 34,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த டி.எச்.எப்.எல்., முன்னாள் இயக்குனர் தீரஜ் வாத்வானை, சி.பி.ஐ., நேற்று முன்தினம் கைது செய்தது.டி.எச்.எப்.எல்., எனப்படும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தீரஜ் வாத்வான், கபில் வாத்வான் சகோதரர்கள் நடத்தி வந்தனர்.இவர்கள், 2010 - 18 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு வங்கிகளில் இருந்து, 43,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இதில், 34,000 கோடி ரூபாய் அளவுக்கு அவர்கள் மோசடி செய்தது தெரியவந்ததை அடுத்து, தீரஜ் மற்றும் கபிலை சி.பி.ஐ., கைது செய்தது.அதில், தீரஜ் வாத்வானுக்கு மட்டும் மருத்துவ சிகிச்சை காரணமாக, இடைக்கால ஜாமின் அளித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமின் காலம் முடிவடைந்ததை அடுத்து, அவரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றுமுன் தினம் கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்