| ADDED : மே 09, 2024 10:27 PM
பெங்களூரு, - கர்நாடக தமிழர்கள் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, வரும் 12ம் தேதி ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்துக்கு வரும்படி, தமிழ் ஆர்வலர் எஸ்.டி.குமார் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:சிங்கப்பூர், மலேஷியா தமிழர்கள் போல, இந்த மண் சார்ந்து, கன்னடர் - தமிழர் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் வகையில், கர்நாடக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துள்ளது.ஜாதி, மத, கட்சி வேறுபாடுகள் இல்லாமல், தமிழர்கள் என்ற உணர்வுடன் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள், ஒற்றுமையாக இணைந்து, ஒன்று சேர்ந்து வென்று எடுப்போம் என்று தொடர்ந்து என்னிடம் பலரும் கலந்துரையாடி வருகின்றனர். என்னுடன் கலந்துரையாடிய பல்வேறு கட்சியினர், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் போன்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரை அருகில் உள்ள யாதவா சங்கத்தில், கர்நாடக - தமிழர்கள் ஒற்றுமை குறித்து ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் கட்சி வேறுபாடின்றி, ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் திரளாக கலந்து கொண்டு, கர்நாடக மாநில தமிழர்கள் வளம் பெறும் வகையில் கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டு கொள்கிறேன். இது தொடர்பாக, 93437 65448 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.