உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு சிக்கல்

தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு சிக்கல்

தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியலால், 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு, ஹிந்தி பேசும் மாநிலங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.'புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அதற்கான நிதியை வழங்க முடியாது' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது, தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்மொழி கொள்கை

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தினால், மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டியிருக்கும். அது, ஹிந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் எனக் கூறி, தி.மு.க., அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என, அ.தி.மு.க., - பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ., அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை ஹிந்தி திணிப்பு எனக் கூறி, ஹிந்தி எதிர்ப்பு அரசியலை மீண்டும் தி.மு.க., கையில் எடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒரு வாரமாக, தொண்டர்களுக்கு தினமும் கடிதம் எழுதி வருகிறார். அதில், 'ஹிந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம்; உயிரைக் கொடுத்தாவது தமிழை காப்போம்' என குறிப்பிட்டுள்ளார்.'உ.பி., பீஹாரில் பேசப்படும் போஜ்புரி, மைதிலி, ஆவ்தி போன்ற மொழிகளை, ஹிந்தி விழுங்கி விட்டது' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை, தி.மு.க.,வினர் அழித்து வருகின்றனர். தி.மு.க.,வின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு அரசியல், இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி., போன்ற கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் ஹிந்தி எதிர்ப்பு கருத்துகளை பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் இதுபோன்ற முயற்சிகளை வைத்து, தி.மு.க.,வின் மோசமான ஆட்சி நிர்வாகத்தை மறைக்க முடியாது. 'முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு, ஹிந்தி பேசும் தொகுதியிலிருந்து எம்.பி.,யான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் என்ன பதில் கூறப்போகிறார்; ஸ்டாலினின் கருத்தை ஏற்பாரா?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னடைவு

தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியலை வைத்து, உ.பி., பீஹாரில், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி., கட்சிகளுக்கும், ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், ஹரியானா, டில்லி, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கும் வேலைகளை பா.ஜ., துவக்கி உள்ளது. தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு கருத்துகளை, அங்கு வேகமாக பரப்பி வருகின்றனர்.இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகையில், 'தமிழகத்தில் மட்டும் கட்சி நடத்தும் தி.மு.க., என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஹிந்திக்கு எதிராக பேசுவதால், தென் மாநிலங்களில் பா.ஜ.,வை பலவீனப்படுத்தலாம். ஆனால், அதுவே ஹிந்தி பேசும் மாநிலங்களில், பா.ஜ.,வை மேலும் பலமாக்கி விடும் என்பதையும் உணர வேண்டும். 'இப்படித்தான், துணை முதல்வர் உதயநிதி, சனாதனத்துக்கு எதிராக பேசினார். அது, வட மாநிலங்களில் இண்டி கூட்டணிக்கு கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதே போன்றதொரு சூழல் தற்போது தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு பிரசாரத்துக்குப் பின் உருவாகி உள்ளது. 'இந்த ஆண்டு இறுதி யில், பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல், அம்மாநிலத்தில் 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி., கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அக்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன' என்றனர் - நமது நிருபர் --.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

veeramani hariharan
மார் 02, 2025 06:54

How about your urdu which is being taught in TN.Government schools. Why theres discrimination


Bahurudeen Ali Ahamed
மார் 01, 2025 17:35

மூன்றாவது மொழிப்பாடமாக ஹிந்தியை கொண்டுவரத்தான் எதிர்ப்பே தவிர ஹிந்தி மொழிக்கு எதிராகவோ அல்லது ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிராகவோ தமிழ்நாடு இல்லை, ஹிந்தி திணிப்பைதான் தமிழ்நாடு எதிர்க்கிறது ஹிந்தி மட்டுமல்ல எந்தமொழியையும் கற்றுக்கொள்ளலாம் தமிழ்நாட்டில், நம் மாநிலத்தில் ஹிந்தி பேசும் வடமாநிலத்து சகோதரர்கள் அமைதியாக வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்


Ganapathy
மார் 02, 2025 07:01

மக்களிடம் கேட்காமல் முடிவெடுக்க ஒரு வரி வாங்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் தான் கேட்பதை கொடுக்கத்தான் வரிகட்டுகின்றனர். பொதுவில் மக்கள் கருத்தை மொதல்ல கேள். கல்வி மந்திரி மவனே ஹிந்தி ப்ரென்ச் படிக்கும்போது நாங்க வேறுவழியில்லாமல் அரசு பள்ளியில் தமிழை மட்டும் எதுக்கு படிக்கணும்?


Ganapathy
மார் 02, 2025 11:59

அரசு பள்ளிகளில் உருது கற்றுக்கொடுப்பதை நீ தட்டிக்கேட்கவில்லை? உருது தமிழக ஹிந்து மக்களின் மொழியா? தமிழ் மட்டுமே தாய் மொழியாக கொண்ட ஹிந்துக்களின் வரியில் இயங்கும் அரசு உள்ள தமிழகத்தில் அவர்களின் மொழியாக இல்லாத உருதை அரசு பள்ளிகளில் ஏன் கற்றுக் கொடுக்கிறது? வரி கட்டும் ஹிந்துக்கள் மீது உருது திணிப்பு ஏன்?


Jay
மார் 01, 2025 15:17

சில சமயம் திமுக பிஜேபியின் இரண்டாவது அணியாக செயல்படுகிறதோ என்ற சந்தேகமும் வருகிறது. சனாதானம் பற்றி உதயநிதி பேசியதற்காக காங்கிரஸ் சட்டீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலை இழந்தது. அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரசின் சாதகமாக இருந்தாலும் கடைசி நேரத்தில் உதயநிதி பேசிய சனாதான எதிர்ப்பு பேச்சால் மட்டுமே காங்கிரஸ் ஓட்டு குறைந்து, பிஜேபி வெற்றி பெற்றது. ஏற்கனவே கடும் தோழி முகத்தில் உள்ள காங்கிரசிற்கு, இந்த இந்தி எதிர்ப்பால் காங்கிரசு இன்னும் அதள பாதாளத்திற்கு செல்லும்.


R SRINIVASAN
மார் 01, 2025 12:05

காங்கிரஸில் ஒரு மானஸ்தர் இருக்கிறார். அவர் ஜகத் குருவின் சிவராத்திரி விழாவில் கோயம்பத்தூரில் கலந்து கொண்டிருக்கிறார். அதற்காக காங்கிரஸில் சிலபேர் அவருக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த மனிதர் அதற்கு நான் பிறவியில் ஹிந்து ,அதனால் ஹிந்துவாக வாழ்ந்து ஹிந்துவாக சாக விரும்புகிறேன் என்று பதில் கொடுத்திருக்கிறார். அவர் பெயர் D.K. சிவகுமார் ,கர்நாடகத்தின் துணை முதல்வர்.


நாஞ்சில் நாடோடி
மார் 01, 2025 13:59

சூப்பர் ...


Krish
மார் 01, 2025 11:24

ஶ்டாலின் கூறியபடி இரு மொழி கொள்கை போதும் என்றால், தமிழ், ஆங்கிலம் அல்லாத இந்தி பேசும் கூட்டணியிலிருந்து உடனே வெளியேற வேண்டும். மற்ற மொழி பேசும் மாநிலங்கள், கட்சிகள் திமுகவை உதற வேண்டும்.


vbs manian
மார் 01, 2025 10:09

ப ஜெ க இன்னும் அதிக இடங்களில் வெல்லும். பொய் பிரச்சாரம் மெல்ல செத்து மடியும்.


rajan_subramanian manian
மார் 01, 2025 09:23

நாங்க யாரு? மம்தாவிடம் பெங்காலி பேசின மாதிரி போஜ்புரியில் பிஹாரில் பேசி லல்லுவுக்கு ஆதாரவு கொடுத்து சமூக நீதி, சமத்துவம், ரியர், கருணா,அண்ணா, அம்பேகர், ஜின்னா, சுயாட்சி, ஜனநாயகம், திராவிடம், முடியலைஆகியவற்றை காப்பாற்றி சனாதனத்தை ஒழித்து பிஜேபியை மறுபடி ஜெயிக்க வைத்து காங்கிரசுக்கு முடிவு கட்டுவோம்.


raja
மார் 01, 2025 08:35

என் அன்பு தங்கையை யும் ஆசை மச்சானையும் திகார் சிறையில் வைத்த கான் கிராசை இந்தியாவில் இருந்து துடைத்தெறியும் வரை ஓய மாட்டேன்...நான் யாரு அவரு பெற் பிள்ளையாக்கும்...


Balaa
மார் 01, 2025 08:28

ஹிந்தி எதிர்ப்பு எதிர்பாரத்த அளவு எடுபடவில்லை. இரண்டாம், மூன்றாம் நகரங்களிலும் பிள்ளைகள் ஹிந்தி படிக்கிறார்கள். அதனால் நேற்றிலிருந்து அதை சமஸ்கிரத எதிர்ப்பாக மாற்றி விட்டானுக. அது பிராமண பாஷை என்று இவர்கள் நினைப்பு., அதனால் ஆதரவு கூடும் என்று அல்ப்ப ஆசை.


Biden
மார் 01, 2025 20:31

இந்தி படிச்சு போரியா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை