உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றி மீது அதீத நம்பிக்கை இல்லை: மிருணாள் ஒப்புதல்

வெற்றி மீது அதீத நம்பிக்கை இல்லை: மிருணாள் ஒப்புதல்

பெலகாவி : ''வெற்றி பெறுவேன் என்று அதீத நம்பிக்கை இல்லை,'' என, பெலகாவி காங்கிரஸ் வேட்பாளர் மிருணாள் ஹெப்பால்கர் ஒப்புக்கொண்டார்.பெலகாவி காங்கிரஸ் வேட்பாளர் மிருணாள் ஹெப்பால்கர் அளித்த பேட்டி: அரசியல்வாதியாக இருப்பதை விட, சமூக ஆர்வலராக இருக்க வேண்டும் என்பதே எனக்கு ஆசை. பள்ளி காலத்தில் இருந்தே, சமூக சேவை செய்கிறேன். என் அம்மாலட்சுமி ஹெப்பால்கர் அமைச்சராக இருக்கிறார்.பொது சேவை செய்வதற்காக அவர் பட்ட கஷ்டத்தை பார்த்துள்ளேன். அவரை பார்த்து அரசியல் ஆசை வந்தது. எந்த கட்சியில் குடும்ப அரசியல் இல்லை. காங்கிரஸ் இம்முறை இளைஞர்களுக்கு, நிறைய வாய்ப்பு கொடுத்து உள்ளது.பெலகாவி தொகுதியின் மூத்த அரசியல் தலைவர்களுடன் ஆலோசித்து, கட்சி மேலிடம் எனக்கு 'சீட்' கொடுத்தது.அமைச்சராக இருந்து மக்களுக்கு சேவை செய்பவர் லட்சுமி ஹெப்பால்கர். என் மாமா சன்னராஜ் ஹட்டிகோளி எம்.எல்.சி.,யாக உள்ளார். 10 ஆண்டுகளாக நானும் இளைஞர் காங்கிரசில் உள்ளேன்.பெலகாவியில் வேலையில்லா பிரச்னை உள்ளது. இங்கு உள்ளவர்கள் வேலைக்காக மஹாராஷ்டிரா செல்கின்றனர்.மறைந்த எம்.பி., சுரேஷ் அங்கடி ரயில்வே இணை அமைச்சராக இருந்தார். ஆனாலும், இப்பகுதியில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர், என்னை விட 37 வயது மூத்தவர். முதல்வராக பணியாற்றிய அனுபவம் உடையவர். பெலகாவி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இரு முறைபணியாற்றினார்.ஆனால் வளர்ச்சிப் பணிகள் செய்யவில்லை. பிரசாரத்திற்கு செல்லும் இடத்தில், பிரதமர் மோடி பெயரை பயன்படுத்துகிறார். நான் பெலகாவியின் மகன்.இந்த உணர்வு மக்களிடமும் இருக்கிறது. உண்மையும் அது தான். வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது.நாம் தான் வெற்றி பெறுவோம் என்று, அதீத நம்பிக்கை இல்லை. என் அம்மா பெலகாவி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். ஆனால் இப்போது சூழல் வேறு. பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆதரவு எனக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை