மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
பெங்களூரு: 'முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சீண்டினால், கர்நாடகாவில் காங்கிரஸ் அழிந்துவிடும்' என பா.ஜ., எச்சரித்துள்ளது.இது குறித்து, அக்கட்சியின், 'எக்ஸ்' வலைதளத்தில், நேற்று கூறியிருப்பதாவது:வழக்கு பதிவாகி, மூன்று மாதங்களான பின், திடீரென எடியூரப்பாவை கைது செய்ய, சதி செய்வது ஏன். இது காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் அரசியல். மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தன் கணவர் மற்றும் பிள்ளைகள் உட்பட 53 பேர் மீது புகார் அளித்துள்ளார். இதில் எடியூரப்பாவுக்கு எதிரான வழக்குக்கு, முக்கியத்துவம் அளித்தது ஏன். காங்கிரசின் டில்லி தலைவர்களின் கீழ்த்தரமான அரசியலுக்கு பணிந்து, எடியூரப்பாவை சீண்டினால், கர்நாடகாவில் காங்கிரஸ் அழியும் என்பதில், சந்தேகமே இல்லை. லோக்சபா தேர்தல் தோல்வியால் விரக்தி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜ.,வுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ., பற்றி அவப்பிரசாரம் செய்த ராகுலை, நீதிமன்ற படி ஏற்றியதால், பழி வாங்கும் அரசியல் செய்கிறது.வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டில், நாகேந்திரா அமைச்சர் பதவியை இழந்தார். அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களை திசை திருப்பும் நோக்கில், எடியூரப்பா மீது குற்றம் சுமத்துகின்றனர்.இதற்கு முன் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், புகார் அளித்த பெண், மனநலம் பாதித்தவர். கெட்ட நோக்கத்துடன் புகார் அளித்துள்ளார். குற்றச்சாட்டு பொய்யானது என, கூறியிருந்தார். மூன்று மாதங்களுக்கு பின், வழக்குக்கு மறு உயிர் கொடுத்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7