மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கியில் வறட்சியால் ரூ.175 கோடி மதிப்பிலான ஏலம், காபி, மிளகு உள்ளிட்ட வேளாண் பணப்பயிர் உட்பட பிற பயிர்களும் சேதமடைந்ததாக வல்லுனர்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இடுக்கியில் கோடை மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. இந்தாண்டு கோடை மழை 74 சதவிகிதம் குறைவு என்பதால் விவசாய சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக மாவட்டத்தில் முக்கிய சாகுபடியும், பணப்பயிருமான ஏலம் ஏக்கர் கணக்கில் கருகின. ஏலம் சாகுபடிக்கு சராசரி வெப்பம் 28 டிகிரி செல்சியஸ் வரை தேவை. அதை விட கூடுதல் வெப்பம் நிலவியதால் ஏலச்செடிகள் கருகின. அதனால் கட்டப்பனை, உப்புத்தரா, பீர்மேடு, குமுளி, ஆனவிலாசம், வண்டன்மேடு, கம்பம்மெட்டு, பாம்பாடும்பாறை, நெடுங்கண்டம், சாந்தாம்பாறை, ராஜகுமாரி, ராஜாக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏல விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.மாவட்டத்தில் வறட்சியால் சேதமடைந்த விவசாயத்தை கணக்கிடுவதற்கு வேளாண்துறை வல்லுனர் குழுவை நியமித்தது. அக்குழு மாவட்டத்தில் சேதமதிப்பை கணக்கிட்டது. அக்குழு வேளாண்துறை அமைச்சர் பிரசாத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இடுக்கியில் ரூ.175.54 கோடி மதிப்பில் ஏலம், காபி, மிளகு உள்ளிட்ட வேளாண் பணப்பயிர்கள் சேதமடைந்தன. அதில் மிகவும் கூடுதலாக ஏலம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 16220.6 எக்டேர் ஏலச் செடிகள் கருகி ரூ.113.54 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் ஏலம் சாகுபடியை கைவிடும் நோக்கத்தில் செடிகளை வெட்டி அகற்றி வருகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7