மெட்ரோ ரயிலில் போங்க கல்வித்துறை அறிவுறுத்தல்
புதுடில்லி:'பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்' என, கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.டில்லி அரசுப் பள்ளிகளுக்கு, கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொதுப் போக்குவரத்தின் நன்மைகளைப் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மெட்ரோ ரயிலைப் பயன்படுத்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.மெட்ரோ ரயில் பயணத்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி மாணவர்களிடம் விளக்க வேண்டும். அதன் பயன் குறித்து 30 நிமிடங்கள் ஓடும் வீடியோக்களை பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டும்.இந்த நடவடிக்கைகளின் போது மாணவர்களின் அன்றாடப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.