உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 500 கிலோ மாம்பழத்தில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்

500 கிலோ மாம்பழத்தில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்

புரி, ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு லோக்சபா மற்றும் சட்டசபைக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நேற்று 42 சட்டசபை தொகுதிகளுக்கும், ஆறு லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஓட்டுப் பதிவை அதிகரிக்க வைக்கும் வகையிலும், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் நேற்று 2,000 சதுரடியில், 500 கிலோ மாம்பழங்களை வைத்து, ஓட்டுப்போடும் கை விரலை போன்ற பெரிய மணல் சிற்பத்தை உருவாக்கினார்.இந்த மணல் சிற்பத்தை செய்து முடிக்க அவருக்கு ஐந்து மணி நேரமானது. கோடைகாலத்தில் மாம்பழம் பலரும் விரும்பும் பழம் என்பதால், அதை வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்ததாக அவர் கூறினார். மேலும், அந்த மணல் சிற்பத்தில், 'உங்கள் ஓட்டு, உங்களின் குரல்' என்று ஆங்கிலத்திலும், 'தேர்தல் திருவிழா நாட்டின் பெருமை' என, ஹிந்தியிலும் வாசகங்களை எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்