உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்களை வேகமாக இயக்கிய இன்ஜின் டிரைவர்கள் சஸ்பெண்ட்

ரயில்களை வேகமாக இயக்கிய இன்ஜின் டிரைவர்கள் சஸ்பெண்ட்

புதுடில்லி கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் ரயில்களை வேகமாக இயக்கிய இரண்டு டிரைவர்களை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா கண்டோன்மென்ட் அருகே ஜாஜாவு - மானியா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே பால மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, பயணியரின் பாதுகாப்பை கருத்தில் வைத்து, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் மணிக்கு 20 கி.மீ., வேகத்தில் இயக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லட்சுமிபாய் ஜான்சி - டில்லி ஹசரத் நிஜாமுதீன் நோக்கி சென்ற கதிமான் விரைவு ரயில், ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு புறப்பட்டது.அப்போது, ரயில்வே பால பணி நடைபெறும் பகுதியில் 160 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது.இதேபோல் ஜம்முவின் காத்ரா - மத்திய பிரதேசத்தின் இந்துார் நோக்கி சென்ற மால்வா விரைவு ரயிலும் அதே பகுதியில் 120 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், இந்த ரயில்களை இயக்கிய டிரைவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, ரயில்வே உத்தரவை மீறும் வகையில் செயல்பட்ட இரண்டு இன்ஜின் டிரைவர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ