| ADDED : மே 29, 2024 04:34 AM
உடுப்பி, : ''தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக்கு பின்னரும், ஹிந்துத்வாவுக்காக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போராடுகிறார்,'' என முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.உடுப்பியில் நேற்று அவர் கூறியதாவது:மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ராமர், லட்சுமணன் போன்று பணியாற்றுகின்றனர். இவர்கள் எப்போது சாப்பிடுகின்றனர்; எப்போது உறங்குகின்றனர் என்பது, கடவுளுக்கு தான் தெரியும். இவர்களை ராணுவத்தினர் நினைவுகூர்கின்றனர். இவர்கள் இருவரும் இல்லாவிட்டால், நாட்டின் சூழ்நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்.கர்நாடகாவும் அவர்களின் பாதையில் செல்ல வேண்டும். ஆனால் இங்கு நடப்பதே வேறு. தென் மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு அதிக தொகுதிகள் கிடைத்தால், அதற்கு எடியூரப்பாவே காரணம் என, விஜயேந்திரா கூறினாராம். அவர் அப்படி கூறியதை நான் கேட்கவில்லை. ஒரு வேளை விஜயேந்திரா கூறியது உண்மை என்றால், அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை.தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தும், அம்மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஹிந்துத்வாவுக்காக போராடுகிறார். கர்நாடகாவில் தந்தை, மகனை புகழ்கிறார்; மகன், தந்தையை புகழ்கிறார். எனவே கர்நாடகாவில் பா.ஜ.,வை சுத்திகரிக்க நான் விரும்புகிறேன். இதை மத்திய தலைவர்களும் கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.