உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பந்தா ஐ.ஏ.எஸ்., அளித்த சான்று மருத்துவமனை டீன் விளக்கம்

பந்தா ஐ.ஏ.எஸ்., அளித்த சான்று மருத்துவமனை டீன் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே : மஹாராஷ்டிராவின் புனேவில் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்ட பயிற்சி ஐ.ஏ.எஸ்., பூஜா கேத்கர், அரசால் வழங்கப்படாத வசதிகளை அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவர் யு.பி.எஸ்.சி., தேர்வின் போது உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக வழங்கி தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்த விசாரணையில் அவர் போலி அடையாளத்தை பயன்படுத்தி தேர்வு முயற்சிகளுக்கான வரம்பை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது போலீசில் யு.பி.எஸ்.சி., புகார் அளித்தது.இந்நிலையில் அவர் புனே மாநகராட்சியின் கீழ் செயல்படும் யஸ்வந்த்ராவ் சாவன் நினைவு மருத்துவமனையில் இருந்து மாற்றுத்திறனாளி சான்று பெற்றது தெரிந்தது. இது குறித்து மருத்துவமனை டீனிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையில், அவரது இடது கால் மூட்டில் ஏழு சதவீத பாதிப்பு இருந்த காரணத்தால் விதிமுறை படியே சான்று வழங்கப்பட்டதான டீன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 25, 2024 10:58

முழங்கால் மூட்டு...... இந்த வயசுல இந்த பிரச்னை இருக்குற அளவுக்கு அதை தொடர்ச்சியா தரையில் வெச்சு உழைக்கக் கூடாது ....


Indhuindian
ஜூலை 25, 2024 06:25

கண்ணு சரியா தெரியாது காது கேக்காது கால் சரியில்லேய் நடக்க முடியாது மூளை வளர்ச்சி கம்மி ஆனா எப்படியெல்லாம் யு பி எஸ் சி யை ஏமாத்தணும்னு தெரியும் அந்த சூப்பர் மூலக்காகவே அவருக்கு நேரடியா பதவி குடுக்கணும் பேசாம அரசியல்ல சேந்துட்டா சரியா இருக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை