உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின் பொறியில் சிக்கி விவசாயி பலி

மின் பொறியில் சிக்கி விவசாயி பலி

பாலக்காடு,:பாலக்காடு, முதலமடை அருகே காட்டு பன்றிக்கு வைத்த மின் பொறியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், பொன்னாயிபாறை பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவதாசன், 57. இவர், பாலக்காடு மாவட்டம் முதலமடை களியம்பாறை பகுதியில் இஞ்சி சாகுபடி செய்திருந்தார். விவசாய நிலத்தில் காட்டு பன்றி நுழைவதை தடுக்க மின் பொறி அமைத்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிலத்திற்கு சென்ற சிவதாசன், கவனக்குறைவாக மின் பொறி மீது கால் வைத்தால், மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த அவரை, அவருடன் இருந்த தொழிலாளிகள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கொல்லங்கோடு போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி