உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகன் மீது ஆசிட் வீசிய தந்தை கைது

மகன் மீது ஆசிட் வீசிய தந்தை கைது

காசர்கோடு : கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள சித்தாரிக்கலில் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர நாத், 50. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் தம்பதியிடையே பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 9ம் தேதி மனைவி மீதான கோபத்தில், அவர் மீது 'ஆசிட்' நிரப்பிய பந்தை சுரேந்திர நாத் வீச முயன்றார். அப்போது சுதாரித்த அந்த பெண் தப்பியோடினார். இதையடுத்து ஆசிட் பந்து, அருகே நின்றிருந்த அந்த தம்பதியின் மகன் மீது விழுந்தது. இதில் மகன் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். தப்பியோடிய சுரேந்திர நாத்தை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ