உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்டாசு கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

பட்டாசு கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

கர்வா : ஜார்க்கண்டில் கர்வா மாவட்டத்தின் ரங்கா பகுதியில் உள்ள பட்டாசு கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடைக்குள் இருந்த ஐந்து பேர் தீயில் சிக்கினர். தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் போராடி, தீயை அணைத்த தீயணைப்பு படையினர், மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேரை பலத்த தீக்காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ஐந்து பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !