உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேட்டரி கடையில் தீ 4 பைக்குகள் நாசம்

பேட்டரி கடையில் தீ 4 பைக்குகள் நாசம்

ராய்ச்சூர்: வாகனங்களுக்கான பேட்டரி விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு வாகனங்கள் நாசமடைந்தன.ராய்ச்சூர் நகரின் மகாவீர் சதுக்கத்தில் பண்டாரி என்பவருக்கு சொந்தமான பேட்டரி கடை உள்ளது. இங்கு அனைத்து வாகனங்களுக்கான பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. வழக்கம் போல் நேற்று காலையும் இரு சக்கர வாகனத்தின் பேட்டரிக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டது. அப்போது திடீரென பேட்டரி வெடித்தது.இதனால் ஏற்பட்ட தீ, கடை முழுதும் பரவியது. பின், முதல் மாடியில் உள்ள கடைக்கும் பரவியது. காயமடைந்த வாலிபர் ஒருவர், ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கடையில் பணியாற்றி கொண்டிருந்த இரு வாலிபர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். நான்கு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.தகவலறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். சதர் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ