உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவு டெலிவரி பாய் கழுத்தறுத்து கொலை

உணவு டெலிவரி பாய் கழுத்தறுத்து கொலை

புதுடில்லி:தலைநகர் டில்லியில், உணவு டெலிவரி செய்யும் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.புதுடில்லி நங்லோய் பகுதியில் வசித்தவர் அமர்ஜித், 30. உணவு டெலிவரி செய்து வந்தார். நேற்று காலை அவருடைய வீடு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதையடுத்து, அவரது மாமாவும் வீட்டு உரிமையாளருமான லட்சுமணன் சென்ற போது கதவு உட்பக்கமாக பூட்டாமல் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அமர்ஜித் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.தகவல் அறிந்து போலீசார் வந்தனர். கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த அமர்ஜித் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று முன்தினம் அதிகாலையில் கொலை நடந்திருக்காலம் என சந்தேகிக்கப்படுகிறது.அமர்ஜித் தன் மாமா லட்சுமணனுக்கு சொந்த மான இந்த வீட்டில் 10 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். உணவு டெலிவரி செய்யும் வேலை செய்த அமர்ஜித்துக்கு எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவரது மனைவி பீஹாரில் உள்ள அவரது தாய் வீட்டில் உள்ளார். குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ