சர்வக்ஞ நகர் லயன்ஸ் சங்கம் நிறுவன விழா
ஹொரமாவு, : பெங்களூரு சர்வக்ஞ நகர் லயன்ஸ் சங்க நிறுவன விழா, தனியார் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.சங்கத்தின் புதிய தலைவர் அன்சு பிரகாஷ் ஸ்ரீவத்சவ் வரவேற்றார் சிறப்பு விருந்தினராக இரண்டாவது துணை மாவட்ட கவர்னர் ராஜு சந்திரசேகர் பங்கேற்றார். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கிரிதர் பேசுகையில், ''முன்னாள் தலைவர் லீலா தேவி ஸ்ரீவத்சவ் தலைமையில், புதிதாக எட்டு உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர். சங்கத்தின் கடந்த கால சாதனைகள் பாராட்டத்தக்கது. மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி, தையல் இயந்திரங்கள் மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கை, திருநங்கையருக்கு உதவிகள், தேவைப்படுவோருக்கு மழை ஜாக்கெட்டுகள் வழங்குதல் உட்பட பல சேவைகள் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.சங்க செயல்பாடுகளை ஐ.பி.எம்.சி.சி., ராஜசேகரய்யா, ரவீந்திரன், ரமேஷ் ராவ், ஆகாஷ் சுவர்ணா ஆகியோர் பாராட்டினர்.