உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசடி வழக்கு: மேதா பட்கர் குற்றவாளி

மோசடி வழக்கு: மேதா பட்கர் குற்றவாளி

புதுடில்லி: மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக துவங்கப்பட்ட அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மேதா பட்கர் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டில்லி சாகேத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில், மேதா பட்கர் குற்றவாளி என நேற்று அறிவிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த வழக்கில் மேதா பட்கருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை