உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு இலவச பேருந்து சேவை தொடரும்

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை தொடரும்

விக்ரம்நகர்:“பெண்களுக்கு இலவச பேருந்து சேவை தொடரும்,” என, மாநில சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் உறுதியளித்தார்.பதவியேற்ற ஒரு நாளுக்குப் பிறகு, புதிய சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் தான் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பா.ஜ., அரசில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை தொடரும். பொது போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.சுகாதாரச் செயலரிடம், செயல்பாட்டில் உள்ள கிளினிக்குகளின் எண்ணிக்கை, பணியாளர்கள், மருத்துவர் வருகை உள்ளிட்ட கிளினிக் மொத்த செயல்பாடுகளை விவரிக்கும் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். என் மதிப்பீட்டின்படி, 30 முதல் 40 சதவீத மொஹல்லா கிளினிக்குகள் கூட தொடர்ந்து திறக்கப்படுவதில்லை. 100 நாட்களுக்குள் வெளிப்படையான மாற்றங்கள் ஏற்படும்.நிலுவையில் உள்ள சுகாதாரத் திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கையையும் கேட்டுள்ளேன். 27ம் தேதிக்குள் எனக்கு கிடைக்கும்.ஒரு மருத்துவராக, மருத்துவ நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டுள்ளேன். அவர்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்.நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பா.ஜ., அரசு கவனம் செலுத்துகிறது.மாநில மக்கள், சுத்தமான குடிநீர் மற்றும் காற்றைப் பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கோடையில் மக்கள் குடிநீர், மின்சார பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடாது, என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.அடுத்த குளிர்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை