பெங்களூரு: 'சந்தன மாநிலமான கர்நாடகாவை, கஞ்சா மாநிலமாக்கியதே, காங்கிரஸ் அரசின் சாதனையாகும்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியது.இதுகுறித்து, 'எக்ஸ்' எனும் சமூக வலைதளத்தில் நேற்று பா.ஜ., கூறியிருப்பதாவது:சந்தன மாநிலமான கர்நாடகா, தற்போது கஞ்சா மாநிலமாக மாறியுள்ளது. பெங்களூரில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதனால் பயமின்றி கஞ்சா, கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. ரேவ் பார்ட்டிகள் நடக்கின்றன.இது தான் காங்கிரஸ் அரசின் சாதனை. கேங்க் வார், இளம்பெண்கள் பலாத்காரம், தாக்குதல், கொலை, குண்டுவெடிப்புகள், ரேவ் பார்ட்டிகள் நடப்பது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் என, பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன.பயங்கரவாதிகள், மதமாற்றம் செய்வோர், போக்கிரிகள், குண்டர்கள், ரவுடிகளுக்கு சித்தராமையா அரசு, முழுமையான சுதந்திரம் அளித்துள்ளது. போலீசாரை கைப்பாவை ஆக்கியதன் விளைவாக, மாநிலத்துக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. இதுவே நாட்டுக்கு, காங்கிரஸ் காண்பிக்கும் கர்நாடகா மாடல்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.