உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 16 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ.3,000 வழங்க அரசு முடிவு

16 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ.3,000 வழங்க அரசு முடிவு

பெங்களூரு: வறட்சியால் பாதிக்கப்பட்ட 16 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு தலா 3,000 ரூபாய் நிவாரண நிதி வழங்குவதற்கு கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவ மழை சரியாக பெய்யாததால், மாநிலத்தின் 223 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.வறட்சி பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கல், கால்நடைகளுக்கு தீவனம் உட்பட நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 18,172 கோடி ரூபாய் வழங்கும்படி, மத்திய அரசுக்கு கர்நாடக அரசு வலியுறுத்தியது.வறட்சி நிவாரண நிதியை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு ரிட் மனுத் தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு இரண்டு வாரங்களில் நிவாரண நிதி அறிவிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தது.ஆனால், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், நிவாரண நிதி வழங்க, தேர்தல் கமிஷனிடம் சிறப்பு அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 3,454 கோடி ரூபாயை மத்திய அரசு கடந்த வாரம் வழங்கியது.இந்த நிதியை கொண்டு, சிறு, குறு விவசாயிகளுக்கு தலா 3,000 ரூபாய் வீதம், 16 லட்சம் பேருக்கு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வழங்கிய நிதியில் இருந்து, முதல் கட்டமாக 480 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.இப்படி, அடுத்தடுத்த கட்டங்களாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நிவாரண நிதி செலுத்துவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ