உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்., அதிகாரி கைது

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்., அதிகாரி கைது

சிக்கபல்லாபூர் : நிலத்திற்கு பட்டா வழங்க விவசாயியிடம், இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி கைது செய்யப்பட்டார்.சிக்கபல்லாபூர் சித்லகட்டா தாலுகா கட்டமாரனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நஞ்சேகவுடா. விவசாயி. இவர், விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.விண்ணப்பத்தை பரிசீலனை செய்த, கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி முனிராஜ், நிலத்திற்கு பட்டா வழங்க நஞ்சேகவுடாவிடம், இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு உள்ளார்.முதலில் நஞ்சேகவுடா ஒப்புக் கொண்டார். பின்னர் முனிராஜ் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார். அவருக்கு சில அறிவுரைகள் கூறிய, லோக் ஆயுக்தா போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.நேற்று காலை முனிராஜிடம், நஞ்சேகவுடா பணம் கொடுத்தார். அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், முனிராஜை கையும், களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ