உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லிக்கு தண்ணீர் தர மறுக்கும் ஹரியானா அரசு: ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

டில்லிக்கு தண்ணீர் தர மறுக்கும் ஹரியானா அரசு: ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லிக்கு தண்ணீர் கொடுக்காமல், அணையின் அனைத்து மதகுகளையும் ஹரியானா அரசு மூடியுள்ளது என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.டில்லியில், வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி ஈடுபட்டுள்ளார். 3வது நாளான இன்று(ஜூன் 23) எக்ஸ் சமூகவலைதளத்தில் அதிஷி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் டில்லி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். ஹத்னிகுண்ட் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால் டில்லிக்கு தண்ணீர் கொடுக்காமல், அணையின் அனைத்து மதகுகளையும் ஹரியானா அரசு மூடியுள்ளது. கிட்டத்தட்ட 28 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஜூன் 23, 2024 20:27

இவர் உண்ணாவிரத போராட்டத்தை விட்டுவிட்டு உண்ணாவிரத தண்ணீரே குடிக்காமல் போராட்டம் செய்தால் மிகபொருத்தமாக இருக்குமே தண்ணீர் மிச்சப்படும்


Sridhar
ஜூன் 23, 2024 19:53

கட்டுமரத்தையே வெஃகி தலை குனிய வைக்கும் இவுங்க உண்ணாவிரத காமெடிய ஒரு புறம் வையுங்க. தண்ணீர் பங்களிக்கும் விஷயமெல்லாம் ஆண்டாண்டு காலமாக முறைப்படுத்தப்பட்ட விஷயங்கள் தானே? ஹரியானா எவ்வளவு தண்ணி கொடுக்கணும் எவ்வளவு கொடுத்தாங்கங்கற விவரமெல்லாம் வெளிப்படையா இருக்குமே? ஒப்பந்தத்தை மீறி குறைவா கொடுத்திருந்தாங்கன்னா, கோர்ட்டுல வழக்கு தொடுக்கலாமே? அட இவுங்கள விடுங்க, பிஜேபி ஆளுங்களாவது இதுல உண்மை நிலவரத்தை எடுத்து சொன்னா, இந்த ஆப்பு கட்சிக்காரங்க செய்யுற பிராடுத்தனத்தை தோலுரிக்கலாமே? அத ஏன் செய்யமாட்டேங்கறாங்க?


P. VENKATESH RAJA
ஜூன் 23, 2024 18:40

தண்ணீர் இல்லை என்று பொய் சொல்லி பொய் பிரச்சாரம் செய்வதாக பாஜக குற்றம் சாட்டுகின்றனர்.. இது உண்மைத் தன்மை ஆராய்ச்சி செய்ய வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை