உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: இதுவரை 110 பேர் பலி

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: இதுவரை 110 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கோடை காலம் இன்னும் முடிவடையாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.இந்நிலையில், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பீஹார், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆகாசராமன்
ஜூன் 21, 2024 11:43

இன்னும் நாலே மாசத்தில் வெயிலை குறைச்சிடுவோம். மோடியின் கேரண்ட்டி.


anuthapi
ஜூன் 20, 2024 20:18

மோடியினால் இதை தடுக்க முடியாதா? ராகுல் மற்றும் ஸ்டாலின் கேள்வி.


Narayanan Muthu
ஜூன் 20, 2024 20:04

இதுக்கும் ஒரு சிபிஐ விசாரணை கோரி கடிதம் எழுதலாமே


angbu ganesh
ஜூன் 20, 2024 18:15

10 லட்சம் கொடுக்கலாமே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ