உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹெப்பால் -- சில்க் போர்டு சுரங்கப்பாதை  திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.9.45 கோடி

ஹெப்பால் -- சில்க் போர்டு சுரங்கப்பாதை  திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.9.45 கோடி

பெங்களூரு : ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு சந்திப்பு வரை 18 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, பெங்களூரு மாநகராட்சி 9.45 கோடி ரூபாய் செலவு செய்கிறது.பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹெப்பால் -- சில்க் போர்டு சந்திப்பு இடையில் 18 கி.மீ., துாரத்திற்கு சுரங்க பாதை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அமைச்சரவையின் ஒப்புதலும் கிடைத்துஉள்ளது.சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை பெங்களூரு மாநகராட்சி மேற்கொள்கிறது. இந்த பணிகளுக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மாநகராட்சி டெண்டருக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இதில் இரண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.ரோட்டிக் கன்சல்டன்ட் லிமிடெட் என்ற நிறுவனம் 9.45 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை டெண்டர் எடுத்துள்ளது. ஆனால் திட்ட அறிக்கை தயாரிக்க, மாநகராட்சி அதிக செலவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்ஜாபூர் -- ஹெப்பால் இடையில் 37 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மெட்ரோ நிர்வாகம் 1.56 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளது. ஆனால் 18 கி.மீ., தூரத்திற்கு 9.45 கோடி ரூபாயா என்றும் கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறுகையில், ''சுரங்கப்பாதை அமைப்பது ஒரு சிக்கலான பணி. பெங்களூரில் இது முதல் திட்டமாகும். பெரும்பாலான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கவில்லை. ''முதல் டெண்டர் வெற்றிகரமாக இல்லை. இரண்டாவது டெண்டரில் தான் திட்ட அறிக்கை தயாரிக்க ஒரு நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. ''நாங்கள் 15 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கணக்கிட்டு இருந்தோம். ஆனால் 9.45 கோடி ரூபாயில் முடிந்துவிட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ