மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
புதுடில்லி:சட்டவிரோத பணப் பரிமற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவுக்கு, பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.டில்லி அரசில் அமைச்சராக பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின் மீது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2917ல் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்ப்ர் 6ம் தேதி ஜெயினுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.அதே நேரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, 2022ம் ஆண்டும் மே 30ம் தேதி சத்யேந்தர் ஜெயினை கைது செய்தது.இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் ஜெயின் தாக்கல் செய்த ஜாமின் மனு, கடந்த 15ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் ஜெயின் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு, நீதிபதி ஸ்வர்ணா காந்த சர்மா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயின் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7