உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த மொழிக்கும் ஹிந்தி போட்டியல்ல: அமித் ஷா

எந்த மொழிக்கும் ஹிந்தி போட்டியல்ல: அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ''எந்த ஒரு மொழிக்கும் ஹிந்தி போட்டி அல்ல. அனைத்து மொழிகளும் நட்புடனும், ஒன்றுக்கு ஒன்றுக்கு ஆதரவாகவும் உள்ளன,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.அலுவல் மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி டில்லியில் நடந்த ஹிந்தி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:ஹிந்தி என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்ததாக அல்லாமல், கலாசார அடிப்படையில் நாடு முழுதும் பரவியுள்ளது. ஹிந்தி தினத்தின் வாயிலாக, அதை ஒரு தகவல் பரிமாற்ற மொழியாக, ஒரு பொது மொழியாக, ஒரு தொழில்நுட்ப மொழியாக மாற்ற உறுதியேற்றோம். தற்போது, சர்வதேச மொழியாக மாற்ற உறுதியேற்போம்.ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி என, எந்த ஒரு மொழியாக இருந்தாலும், மக்களிடையே சிறப்பான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே நம் அரசியல் நிர்ணய சபைக்கான அலுவல் மொழிகள் உருவாக்கப்பட்டன. ''எந்த ஒரு மொழிக்கும் ஹிந்தி போட்டி அல்ல. அனைத்து மொழிகளும் நட்புடனும், ஒன்றுக்கு ஒன்றுக்கு ஆதரவாகவும் உள்ளன,இதன்படி, ஹிந்தி அலுவல் மொழியாக ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டைக் கொண்டாடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
செப் 15, 2024 07:13

போட்டியல்ல. யமன்.


பல்லவி
செப் 15, 2024 03:54

முடிந்த அளவு தொல்லை செஞ்சாச்சு இனி என்ன


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 14, 2024 22:52

400 பார் என்று அலப்பறை கடைசியில் மினாரிட்டி கோவ்ட்.


Ms Mahadevan Mahadevan
செப் 14, 2024 22:36

ஹிந்தி திணிக்கப்படுகிறது. தமிழ் நாளிதழ்களில் ப்ரதான் மந்திரி ரோ இச் கர் யோஜனா - இந்த மாதிரி வேலைகள் செய்யவது . ஹிந்தி மொழி பரப்ப அதிக அளவு விளம்பரம் செய்வது ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில மொழியை முன்னுரிமை இல்லாமல்இரயில்வே இயக்குகிறது/செய்வது. இவையெல்லாம் திணிப்பு தான். அவனவன் விரும்பி பல மொழிகளை படிக்கணும் . அதை விட்டு ஒரு மொழிக்கு அதிகம் செல்லம் கொடுக்க கூடாது.


GMM
செப் 14, 2024 22:33

இந்தி தேசிய அலுவல் / இணைப்பு மொழி என்று நிர்ணய சபை ஏற்ற பின், இதனை மாநிலங்கள் விருப்பத்திற்கு விட்டது தவறு. இருமொழி ஏமாற்று கொள்கை திராவிட தமிழகத்தில் , சம அளவில் மலையாளம் , தெலுங்கு கன்னட மொழி பேசும் மக்கள் உண்டு. ஆனால் மாநில அலுவல் மொழி தமிழ். தேசிய அளவில் மட்டும் கூடாது என்றால் சரியா ? பாரத கலாச்சாரம் ஒன்று. மொழி வேறுபட்டு இருந்ததால் ஆங்கிலேயர் , முகலாயர் எளிதில் குடியேறி அடிமைப்படுத்தி விட்டனர். அவர்களுக்கு ஒரு மொழி கொள்கை ஆக்கிரமிக்க பெரிதும் உதவியது .? அதிக மக்கள் அறிந்த இந்தி தகவல் பரிமாற்ற மொழியாக இருந்தால் போதும். தமிழ் சமஸ்கிருதம் போன்று மொழி வளம் இந்தியில் இல்லை. பள்ளி கல்வி வரை நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை விரைவில் அமுல்படுத்த வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 14, 2024 21:54

வெறுப்பு அரசியலை விமர்சிக்கும் ராகுல் என்றாவது ( ஹிந்தி, சமஸ்கிருதத) மொழி வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்த்ததுண்டா? ஹிந்தியையே ஆட்சிமொழியாக ஆக்கவேண்டும் என்று யோசனையைப் புகுத்தியது மகாத்மா காந்தி. சமஸ்கிருதத்தையே ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று விரும்பியது டாக்டர் அம்பேத்கர். திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் இப்போது நடப்பது (சுயநல) மொழி வெறுப்பு அரசியல்தான்.


venugopal s
செப் 14, 2024 23:51

உங்கள் ஆட்களுக்கு தான் காந்தியைப் பிடிக்காதே, அப்புறம் ஏன் அவருடைய ஹிந்தித் திணிப்பு திட்டத்தை பாஜகவும் தொடர வேண்டும்? ஹிந்தியை ஆட்சி மொழி இல்லை என்று முடிவு எடுக்க வேண்டியது தானே!


முக்கிய வீடியோ