ஹிந்து நாடார் அசோசியேஷன் திருமண மண்டபம் கட்ட திட்டம்
பெங்களூரு: கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் செப்டம்பர் மாத செயற்குழுக் கூட்டம், சங்க அலுவலகத்தில் முன்னாள் பொருளாளர் ரங்கநாதன் தலைமையில் நடந்தது.ரங்கநாதன் பேசுகையில், ''சங்கம் சார்பில் தொழில் முனைவோர் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள கஹினா வணிக வலையமைப்பின் அறிமுகக் கூட்டம் நடக்கும் இன்றைய தினம், நம் சங்க வரலாற்றில் பொன்னான நாள்,'' என்றார்.இதுவரை கஹினா வணிக வலையமைப்பில் உறுப்பினராக சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள், தங்களின் தொழில் விபரங்களை பகிர்ந்து கொண்டனர்.சங்க செயலர் கிருஷ்ணவேணி பேசுகையில், ''அனைவரும் இணைந்து, தொழில் முனைவோர் வலையமைப்பின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என்றார்.சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகரன் பேசுகையில், ''சங்கத்தின் 2024ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், கல்யாண மாலை நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா ஆகிய மூன்றும் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, ஜனவரி 26ம் தேதி முப்பெரும் விழா சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.சங்க துணை செயலர் விஜயா ராம்குமார் பேசுகையில், ''சங்கத்தின் நிதி நிலையை உயர்த்த சங்கம் சார்பில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். திருமண மண்டபம்; சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்,'' என்றார்.இதற்கு காமராஜர் என்கிளேவ் குடியிருப்பு உரிமையாளர்கள் சங்க செயலர் சசிகாந்த் பதிலளிக்கையில், ''இதற்கான முயற்சிகளை விரைவில் மேற்கொள்வோம்,'' என்றார்.காமராஜர் என்கிளேவ் குடியிருப்பு உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சரவண்ராஜ் பேசுகையில், ''ஹிந்து நாடார் அசோசியேஷன் வளர்ச்சி முயற்சிகளுக்கு, சங்க உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என்றார்.துணை செயலர் ஸ்ரீனிவாசகம் நன்றி கூறினார்.கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷனின் செப்டம்பர் மாத செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள். இடம்: பெங்களூரு.