மேலும் செய்திகள்
கருணாநிதி மாடு பிடி வீரரா : சீமான் கேள்வி
3 hour(s) ago | 2
பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு
3 hour(s) ago | 2
3,500 கிமீ தூரம் செல்லக்கூடிய கே4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி
4 hour(s) ago | 2
விஜயபுரா: ''நிவாரண தொகைக்காக, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, அமைச்சர் சிவானந்த் பாட்டீல், சட்டசபையில் விமர்சித்தார். இவரது பேச்சை கண்டுகொள்ளாத, துணை முதல்வர் சிவகுமார் தற்கொலை செய்து கொள்ளட்டும். அவரது குடும்பத்தினருக்கு நான் 50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குகிறேன்,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர் பதவியில் அமர, சிவகுமார் திட்டம் தீட்டியுள்ளார். சித்தராமையா பதவியை இழந்து, வீட்டுக்கு செல்வார்.சித்தராமையாவை பதவியில் இருந்து, கீழே இறக்க முயற்சித்தால், காங்கிரஸ் அரசு கவிழவும் வாய்ப்புள்ளது. தனக்கு ஆதரவாக உள்ள வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, சிவகுமார் முயற்சிக்கிறார். இதே காரணத்தால் பாகல்கோட்டில், லிங்காயத், ஒக்கலிகர் ஒன்றுதான் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் மகள் சம்யுக்தாவை வெற்றி பெற வைத்தால், சிவானந்த் பாட்டீல் தன்னுடன் இருப்பார் என்பது, சிவகுமாரின் எண்ணமாகும். சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கவும், உதவியாக இருக்கும்.வரும் நாட்களில் காங்கிரஸ் உடைந்து, புதிய அரசு அமையும். எனவே சிவகுமாருக்கு ஆதரவாக உள்ள வேட்பாளர்களை, தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் சித்தராமையா சிக்கியுள்ளார். இவர் தன் சக்தியை காண்பிக்காவிட்டால், அவர் முதல்வர் பதவியை இழப்பது உறுதி. பெலகாவி, உத்தரகன்னடா, பாகல்கோட்டில் சிவகுமார் ஆதரவாளர்கள் உள்ளனர்.நிவாரண தொகைக்காக, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, அமைச்சர் சிவானந்த் பாட்டீல், சட்டசபையில் விமர்சித்தார். இவர் மீது சிவகுமார் நடவடிக்கை எடுக்கவில்லை. சிவானந்த் பாட்டீல் தற்கொலை செய்து கொள்ளட்டும். அவரது குடும்பத்தினருக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக, நான் கூறியிருந்தேன். இப்போதும் அதையே கூறுகிறேன்.இவரது பேச்சை கண்டு கொள்ளாத, துணை முதல்வர் சிவகுமார் தற்கொலை செய்து கொள்ளட்டும். அவரது குடும்பத்தினருக்கு நான் 50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குகிறேன். என்னிடம் பணம் இல்லாவிட்டாலும், விவசாயிகளிடம் வசூலித்து நிவாரணம் வழங்குவேன்.ஹிந்து என்ற வார்த்தை அழுக்கானது என்று சொன்ன அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தன் மகள் லோக்சபா தேர்தலில், வெற்றி பெற வேண்டும் என்பதால், ஹிந்து கோவில்களுக்கு செல்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 2
3 hour(s) ago | 2
4 hour(s) ago | 2