உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் இருக்கு... தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாது: மதுவிலக்கு குறித்து திருமாவளவன் கேள்வி

பீஹாரில் இருக்கு... தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாது: மதுவிலக்கு குறித்து திருமாவளவன் கேள்வி

விழுப்புரம்: 'பீஹாரில் மது விலக்கு அமலில் இருக்கும் போது தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.மதுக்கடைகளை அரசே நடத்தி வரும் நிலையில், ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன், அக்., 2ல் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார். அதோடு நில்லாமல், மாநாட்டுக்கு வருமாறு, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h67mbei2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, விழுப்புரத்தில் இன்று (செப்.,11) நிருபர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி: மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறோம். லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். விடுதலை சிறுத்தை கட்சி மாநாட்டில் கட்சி வரம்புகளை கடந்து, ஜனநாயக அடிப்படையில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். வி.சி.க., மது ஒழிப்பு மாநாட்டில் புதிதாக கட்சி துவங்கி உள்ள விஜய்யும் பங்கேற்கலாம். மதவாதக் கட்சி என்பதால் பா.ஜ., பா.ம.க.,வுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர்களுடன் ஒருபோதும் இணையமாட்டோம்.

மதுவிலக்கு

கட்சிகள் வரம்புகளை கடந்து அனைவரும் ஒரே குரலில், ஒருமித்த குரலில் மாநாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது எங்களுடைய அறைகூவல். தேர்தலுக்கான அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. 24 மணி நேரமும் கட்சி சார்ந்த நிலைப்பாட்டை எடுக்க முடியாது. தி.மு.க., அ.தி.மு.க., இடதுசாரிகள் மதுவிலக்கிற்கு ஆதரவு தருகின்றனர்.

சிக்கல் என்ன?

மதுக்கடைகளைக் குறைப்பது தி.மு.க.,வின் வாக்குறுதி; அதை நினைவுபடுத்துகிறோம். மதுக்கடைகளை மூடி, பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பீஹாரில் மது விலக்கு அமலில் இருக்கும் போது தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? எல்லாவற்றையும் கூட்டணி, அரசியல் உடன் இணைத்து பார்க்க கூடாது.

தி.மு.க.,விற்கு வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன. மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான். மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். தி.மு.க.,விற்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை நான் முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Palanisamy T
செப் 12, 2024 14:21

பிஜேபி பாமக மதவாதக் கட்சிகளா? சகிப்புத் தன்மையும் புரிந்துணர்வமுள்ள மதம் ஹிந்துமதமென்று கடந்த அனைத்துலக ஹிந்து மாநாட்டுக் கருத்தரங்கில் முன்னாள் தாய்லாந்து பிரதமர் ஹிந்துமதத்தை பிரகடனமா அறிவித்ததை மறந்தீர்போலும்இந்துக்கள் வீடு வீடாகச் சென்று பொய்ப் பிரச்சாரம் செய்வதில்லை பிரச்சாரம் செய்து மதத்திற்கு ஆட்கள் சேர்ப்பதில்ல. இவ்வளவுக் காலமாக அப்படித்தான் இருந்தார்கள்? அதாவது தூங்கி கொண்டிருந்தார்கள் .மேலும் பாமக சாதிக் கட்சியாக செயல்படுகின்றார்கள். அவர்களை மதவாதக் கட்சி என்று சொல்கின்றீர்களா? அப்படியே வைத்துக் கொண்டாலும் நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படும் நாட்டிற்க்கு ஏன் அழைப்பில்லை


Palanisamy T
செப் 12, 2024 13:37

பிஜேபி பா ம க மதவாதக் கட்சிகளா? இத்தனை நாளாக


Palanisamy T
செப் 12, 2024 13:31

"பீஹாரிலும் ஊழல் நடக்குது, தமிழகத்திலும் ஊழல் நடக்குது . ஏன் தமிழகத்தில் மட்டும் ஊழல் நடக்கக் கூடாது தடுக்கவேண்டுமென்று சொல்கின்றீர்களா? இந்த உயர்ந்த போதனையை யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் தலைவனே இப்படியென்றால் தொண்டர்கள் எப்படி ?கேட்பதற்க்கே நன்றாகயில்லையே


Anu Sekhar
அக் 02, 2024 23:21

இப்போ பிரசாந்த் ஸ்வாமி மதுவிலக்கை நீக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து பிரச்சாரம் செய்கிறார். பிஹாரில் ?


NATARAJAN R
செப் 12, 2024 07:06

இந்த மாநாடு காரணம் காட்டி, எல்லா கடைகளிலும், இவரது கட்சி வசூலில் இறங்கும்.


NATARAJAN R
செப் 11, 2024 23:21

இவர் நடத்தப்போவது மாநாடல்ல. நாடகம். இவர் ஆளும் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு யாரிடம் கோரிக்கையை வைக்கிறார்? மக்கள் எதுவும் புரியாதவர்கள் என்று நினைக்கிறார். திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மது விலக்கு பரிபூரணமாக அமல் படுத்த விரும்பாத திராவிட கட்சிகள். பீகார் மாநிலத்தில், மக்கள் படும் அனைத்து கஷ்டங்கள், மதுவால் என உணர்ந்து, முதல்வர் திரு நிதீஷ் குமார், பூரண மதுவிலக்கு அமல் படுத்த உத்தரவு பிறப்பித்தார். கள்ளச்சாராய மரணங்கள் பல நடந்தது. ஆனால் திரு நிதீஷ் குமார் அவர்கள் கள்ள சாராயம் குடித்து மரணங்கள் நிகழ்ந்தால் நிவாரணம் எதுவும் அரசு தராது.சாராயம் குடிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. அதை மீறி குடித்தால் மரணங்கள் நிகழ்ந்தால் அரசு பொறுப்பு ஏற்க முடியாது என்று அறிவித்தார். இப்போது பீகார் வளர்ச்சி நோக்கி. ஆனால் தமிழ் நாட்டில் கள்ள சாராயம் குடித்து இறந்தால் அன்றே குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம். இவர் உண்மையிலேயே மதுவிலக்கு வேண்டும் என்று நினைத்தால், டாஸ்மாக் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். பூனை மது விலக்குக்கு எந்த கட்சி உறுதி அளிக்கிறதோ, அந்த கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவிக்க வேண்டும். செய்வாரா வி சி க தலைவர்?


RAMAKRISHNAN NATESAN
செப் 11, 2024 19:46

அப்போ இத்தினி வருசமா டீம்காவுக்காக பண்ணினதெல்லாம் ?


saravan
செப் 11, 2024 17:28

அந்த எம்பி கனிமொழி அவர்களிடம் கேட்கலாமே கூட்டணி கட்சி என்ற முறையில். மதுவால் இளம் விதவைகள் என்று போலிநாடகம் நடத்தினார்... அன்றெல்லாம் அய்யா நீங்கள் உறக்கத்தில் இருந்தீர்களா ...


Jay
செப் 11, 2024 17:10

திமுக தலைவர்களை வெச்சுசெஞ்சு பாடம் எடுத்த நிதிஷ்குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, திருமாலின் அரசியல் நிலைப்பாடு மாற்றமா என்று கூட யோசிக்க தோணுகிறது


Jay
செப் 11, 2024 17:08

இதெல்லாம் வெறும் அரசியலுக்காக. அடுத்த முறை திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பதற்காக, அதிமுகவுடன் சற்று நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்வது திமுகவுக்கு மென்மையான எதிர்ப்பு கொடுப்பது எல்லாம்..... பெரும்பான்மையான டாஸ்மார்க் சப்ளை திமுக குடும்பம் கட்சி அரசியல்வாதிகள் பெயரில் நடத்தும் மது ஆலைகளில் இருந்து தான் வருகிறது.


Selvasubramanian Chelliah
செப் 11, 2024 16:56

நீயே ஒரு மதவாதி சாதியவாதி .....உனக்கு பொழப்பு வேணும் அதனால உருட்டு முட்டு கொடுக்க


முக்கிய வீடியோ