உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூடிஸ் ரேட்டிங்ஸ் சர்வதேச நிறுவனம் கூறியிருப்பதாவது: கடந்த 2024ம் ஆண்டு நிதியாண்டின் இடையில் இந்திய பொருளாதார வளர்ச்சி தற்காலிகமாக சரிந்தது. தற்போது, இந்திய பொருளாதார வளர்ச்சி மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி அதிகவேகமாக இருக்கும். கடந்த நிதியாண்டில் 6.3 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 6.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய வங்கிகளின் செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் இந்திய வங்கிகளின் சொத்துத் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டுகளில் அதிகரித்து வந்த, ரெப்போ வட்டி விகிதம், பிப்., மாதம் 0.25 சதவீதம் ஆர்.பி.ஐ., குறைத்துள்ளது. அரசின் மூலதன செலவு, நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கான வரி விலக்கினால் நுகர்வை ஊக்குவித்தல் உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 6.3 சதவீதத்தில் இருந்து, 2025-26 நிதியாண்டில் 6.5 சதவீதமாக அதிகரிக்கும். இந்த நடவடிக்கைகள் இந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பல்லவி
மார் 13, 2025 02:47

வழக்கமாக சுடும் வடையை போல இதுவும் ஒன்று என்றால் மிகையாகாது


vivek
மார் 13, 2025 10:11

சரிங்க பல்வலி


अप्पावी
மார் 12, 2025 21:12

ஏழு சதவிதம், எட்டு சதவீதம், ஒன்பது சதவீதம்னு பட்ஜெட் போட்டவங்க, நிட்டி ஆயோக் ஆளுங்க, ஆலோசகர்கள் எல்லாருக்கும் நன்றி.


சந்திரசேகரன்,துறையூர்
மார் 12, 2025 23:51

ஏலே அறிவாலய அடிமையே கொல்ட்டி உன் பெயரை தமிழில் போட வக்கு இல்லை நீயெல்லாம் கருத்து போடுற


A1Suresh
மார் 12, 2025 21:07

ராஹுல்காந்தியிடம் கொடுங்கள். ஒரே வருடத்தில் பொருளாதர வளர்ச்சியை மைனஸ்ஸில் கொண்டு செல்வார். ஜாதிக்கணக்கெடுப்பு, பணக்காரர்களிடமிருந்து சொத்தினை எடுத்து ஏழைகளுக்கு தருதல், சீனாவிற்கு ஆதரவாக பாலிசிகள், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பணிந்து போதல், மாதா மாதம் டகா டக் டகா டக் என வேலை இல்லாதவர்க்கு 2500 ரூ தருவது, 100 நாள் வேலையை 300 நாள் வேலையாக முன்னேற்றுவது, இப்படி நடுத்தெருவிற்கு நாடு வந்துவிடும்.


Velan Iyengaar
மார் 12, 2025 21:02

ஊரை ஏமாற்றும் தலைப்பு .... உலக நாடுகளில் கடந்த வருட வளர்ச்சியை விட 0.2% வளர்ச்சி மட்டுமே இந்தியா அதிகமாக எட்டும் ..... ஆனால் தலைப்பு என்னவோ 6.5% அதிகமாக வளர்ச்சி அடையும் என்பது போல எழுதி இருக்கிறார்கள் ....


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
மார் 12, 2025 23:54

மூர்க்கனே உனக்கு இந்தியாவை குறை கூறவில்லை என்றால் பொழுது விடியாது...தோ உனக்கு வெட்கமாக இல்லையா


Velan Iyengaar
மார் 12, 2025 20:53

அடப்பாவிகளா


புதிய வீடியோ