உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.டில்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு வர விரும்புகிறார்கள். உலகிற்கு புதிய பொருளாதார பாதையை இந்தியா வழங்கி உள்ளது. செமி கண்டக்டர்கள் முதல் விமானந்தாங்கி கப்பல்கள் வரை இந்தியா உற்பத்தி செய்கிறது. பல சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது.

செல்வாக்கு

உலகை முன்னோக்கி அழைத்து செல்லும் ஏ.ஐ., உச்சி மாநாட்டில் இந்தியா இணை தலைமையாளராக இருந்தது. உலக நாடுகளின் 'பேக் ஆபீஸ்' ஆக இந்தியா பல தசாப்தங்களாக இருந்தது. தற்போது தற்போது உலக நாடுகளின் தொழிற்சாலையாக உள்ளது. இந்தியாவின் வெற்றியை விரிவாக அறிய உலகம் விரும்புகிறது. உலக அளவில் நம் நாட்டின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

நம்பிக்கை

பல காலாவதியான சட்டங்களை பா.ஜ., அரசு ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 3வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது. இந்தியாவின் புதிய சாதனைகளை உலகளாவிய செய்தி சேனல்கள் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Jay
மார் 01, 2025 15:11

டிரம்ப் அவர்கள் ஒவ்வொரு நாட்டுத் தலைவருடன் பேசும் போதும் வேறு விதமாக பேசுகிறார், ஆனால் மோடியுடன் பேசும் பொழுது மிக மரியாதையாகவும் நண்பர் என்றும் ரொம்ப அவர்களே பேசும் நிலையில் இந்தியா இருக்கிறது என்பது சந்தோஷம். ஐரோப்பா யூனியனும் ரஷ்யாவும் இந்தியாவுடன் பேசும் விதம் மரியாதையுடன் இருக்கிறது. மிகச்சிறந்த வெளியுறவுத்துறை அமைச்சர் இருப்பதால் இந்தியாவின் மதிப்பு நல்ல முறையில் இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நன்றி. இப்படிப்பட்ட ஒரு அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டின் பெயரையும் உலக அளவில் இந்தியாவின் பெயராக எடுத்துச் சென்றது மோடி அவர்கள் மட்டுமே. இதற்கு முன் திமுக 15 வருடங்கள் அமைச்சரவையில் இருந்த பொழுதும் இப்படி ஒரு பெருமை தமிழ் மொழிக்கு உலக அளவில் இருந்ததில்லை. மோடி அவர்கள் வந்த பிறகு இவ்வாறான பெருமை உலக முழுவதும் பரவலாக உள்ளது இதற்கும் மோடி அவர்களுக்கு நன்றி.


அபிஷேக்
மார் 01, 2025 14:31

எல்லார்க்கிட்டேருந்தும் ராணுவ தளவாடம் இறக்குமதி பண்ணினா நல்ல கஸ்டமர்னு செல்வாக்கு இருக்கத்தானே செய்யும்.


Kumar Kumzi
மார் 01, 2025 15:31

முட்டு குடுக்குற டாஸ்மாக் கொத்தடிமையின் உலக அறிவு பிரமாதம் ...


Apposthalan samlin
மார் 01, 2025 14:12

மோடி தான் தம்பட்டம் அடித்து கொள்கிறார் டாலர் 88.56 போயாச்சு


Kumar Kumzi
மார் 01, 2025 15:33

மதம் மாறிய கொத்தடிமை வேற எப்படி யோசிப்பா


அப்பாவி
மார் 01, 2025 16:21

ரூவாய்க்கு அவ்ளோ டிமாண்டு.


Oviya Vijay
மார் 01, 2025 13:50

உலகத் தலைவர்கள் இந்தியா வரும்போது, அவர்கள் நம் நாட்டில் பயணிக்கும் பாதையில் இருக்கும் குடிசைகளை எல்லாம் திரைச்சீலைகள் போட்டு மறைக்கும் அவலம் நம் இந்தியாவில் தான் உள்ளது. ஒருவேளை மற்ற வளரும் நாடுகள் இவ்வாறெல்லாம் செய்வதில்லை போல... இந்தியா அதனைச் சரியாக செய்கிறது என்பதைத் தான் உலக நாடுகள் பாராட்டுகின்றனவோ... ஒரு குடும்பம் கூட பசி பட்டினியால் உணவருந்தாமல் தூங்கச் செல்லுமானால் அது மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது அவர்களுக்கு அவமானமே தவிர பெருமை இல்லை... அடித்தட்டு மக்களின் வளர்ச்சி மட்டுமே ஒவ்வொரு அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டுமேயன்றி மேல்தட்டு மக்களின் மென்மேலான வளர்ச்சி அல்ல...


vivek
மார் 01, 2025 14:21

தங்கள் மொக்கை கருத்தை இங்கு தமிழ்நாட்டில் செய்யலாமே...செய்வீர்களா??


பிரேம்ஜி
மார் 01, 2025 14:36

வழக்கப்படி வாய் வடை! வெறும் பெருமிதம்! ஜால்ராவில் மலர் நம்பர் ஒன் என்று நாங்கள் பெருமிதம் அடைகிறோம்! பாரத மாதா கி ஜே!


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மார் 01, 2025 14:39

உழைத்து சாப்பிட வக்கில்லாதவன் கூவல்


Kumar Kumzi
மார் 01, 2025 15:38

நீ ஓசிகோட்டருக்காக எவ்வோலோ கூவுனாலும் நீ இன்பநிதிக்கும் போஸ்ட்டர் தான் ஓட்டணும் கொத்தடிமை


சமீபத்திய செய்தி