உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வில் 2,250 பேர் பூஜ்ஜியம் முடிவுகள் வெளியானதில் தகவல்

நீட் தேர்வில் 2,250 பேர் பூஜ்ஜியம் முடிவுகள் வெளியானதில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தேர்வு மையம் வாரியாக வெளியிடப்பட்ட இளநிலை மருத்துவப்படிப்புக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வில், 2,250 தேர்வர்கள் பூஜ்யம் பெற்றுள்ளனர்.நீட் நுழைவுத்தேர்வில், ஒவ்வொரு சரியான விடைக்கும் நான்கு மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது. தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது. இதை, 'நெகடிவ்' மதிப்பெண் என்று அழைக்கின்றனர். நீட் நுழைவுத் தேர்வில் சர்ச்சை எழுந்ததை அடுத்து, தேர்வர்களின் பெயர்களின்றி தேர்வு மையங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அதில், 2,250 தேர்வர்கள் பூஜ்ஜியம் பெற்றுள்ளனர். 9,400 பேர் நெகடிவ் மதிப்பெண் பெற்றுள்ளனர்.தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ள ஜார்க்கண்டின் ஹஸாரிபாக் மையத்தில் பூஜ்ஜியத்திற்குள் குறைவான மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதே போல, 2,321 தேர்வர்கள், 720க்கு 700 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்கள், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 276 நகரங்களில் உள்ள 1,404 மையங்களில் தேர்வு எழுதியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கான பயற்சி மையங்களில் பயிற்சி பெறாதவர்கள்.நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு புகழ்பெற்ற ராஜஸ்தானின் சிகார் நகர மையங்களில் தேர்வு எழுதிய 2,000 பேர் 650க்கு கூடுதலான மதிப்பெண்ணும், 4,000 பேர் 600க்கு கூடுதலான மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தீனா
ஜூலை 22, 2024 21:13

பூஜ்ஜியம் வாங்குனவங்களுக்கு மூணு சதவீதம்.இட ஒதுக்கீடு வேணும். சிப்ரீம்.கோர்ட்டில் வழக்குப் போடலாம்னு இருக்கேன்.


Starlish Raj
ஜூலை 22, 2024 19:38

அரசு கோட்டா ஷீட் எப்படி காசு குடுத்து வாங்க முடியும்.நானூறு கோடிக்கு மேல பணம் வாங்கி நீட் கொஸ்டின் லீக் பணிற்கங்க மத்தியில் இருக்கும் அரசு


Rangarajan Cv
ஜூலை 22, 2024 11:41

State wise data will show level of education reach


sridhar
ஜூலை 22, 2024 11:22

நீட் இல்லாவிட்டால் இதில் பலரும் பணம் கொடுத்து மருத்துவர்கள் ஆகி இருப்பார்கள், உயிர் காக்கும் தொழிலில் திறமை மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும், இது ஒன்றும் அரசு அலுவலக குமாஸ்தா பதவி கிடையாது .


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 10:18

நாமக்கல்லில் தேர்வெழுதிய மாணவர்களில் ஐந்தரை சதவீதம் 650க்கு மேல் மார்க். தமிழக அளவில் வெறும் ஒன்றரை சதவீதம்தான் நல்ல மார்க் எடுத்தவர்கள். சிபிஐ விசாரணை தேவை.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 22, 2024 11:10

மொதல்ல... குஜராத், பீகார் போன்ற இந்திக்கார மாநிலங்களில் இந்திக்காரனுங்க பண்ண மோசடிய பத்தி சொல்லுங்கய்யா.. அப்புறம் தமிழ்நாட்டை பத்தி பேசலாம். இந்திக்காரனுங்களது உனக்கு நல்லா இருக்கு போலிருக்கு. நான் மோசடியச் சொல்றேன்...


rama adhavan
ஜூலை 22, 2024 20:21

நாம் இருப்பது தமிழகம். நமக்கு எதற்கு பிற மாநிலம். முதலில் கூரை ஏறி கோழி பிடிப்போம். பின் வானம் ஏறி வைகுண்டம் போவோம். இந்த குண்டக்கா மண்டைக்கா பதில் வேண்டாம்.


CN CHITRA
ஜூலை 23, 2024 06:14

Yes CBI must take action for Nammakal District.


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 09:34

பெற்றவர்களின் ஆசைக்காக கட்டாயத்தால் தேர்வெழுதி முட்டை வாங்கியிருப்பார்கள்


rama adhavan
ஜூலை 22, 2024 09:02

தமிழ்நாட்டில் எவ்வளவு பூச்சியம், மைனஸ் மதிப்பு எண்கள் என்று யாராவது சொல்லுங்களேன்.


S. Narayanan
ஜூலை 22, 2024 08:01

ஒழுங்காக அமைதியாக நடந்து கொண்டு இருந்த நீட் தேர்வு விஷயத்தில் விடியல் அரசு மூக்கை நுழைத்து சுய லாபத்துக்காக மாணவர்கள் வாழ்வுடன் விளையாடுகிறது. நீட் தேர்வு நடந்தால் மாணவர்கள் டாக்டர் ஆகலாம் நீட் ரத்து செய்தால் அரசியல்வாதிகள் டாக்டர் ஆகலாம்


vadivelu
ஜூலை 22, 2024 07:18

துட்டை வாரி கொடுத்து மருத்துவம் படித்து இருப்பார்கள், இப்ப பாருங்க தேர்வு எழுத சொல்லி அவமான படுத்திட்டாங்க. அதுக்குதான் இந்த தேர்வு வேண்டாம்ங்கிறாங்க.


xyzabc
ஜூலை 22, 2024 08:21

விடியல் அரசிற்கு இது வடிவேலு ஜோக்


Kasimani Baskaran
ஜூலை 22, 2024 05:53

அதிஷ்டத்தை மூலம் இடம் கிடைக்கும் என்று நினைத்து எழுதினார்களோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி