உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் மக்களை அவமதிப்பதா?: கார்கே காட்டம்

பீஹார் மக்களை அவமதிப்பதா?: கார்கே காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீஹார் மக்களை அவமதித்து விட்டார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.பீஹாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கார்கே பேசியதாவது: நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம். சீனா இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளையும், சாலைகளையும் கட்டி ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். பா.ஜ., அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.

முஜ்ரா நடனம்

பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீஹார் மக்களை அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் பீஹாரில் ஆடப்படுகிறது. இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல. இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரசாரத்தில், இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக இண்டியா கூட்டணி கட்சியினர் ‛முஜ்ரா' நடனமாடலாம் என பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
மே 26, 2024 21:00

முஜ்ரா நடனம் ன்னா என்னன்னு சில சக வாசகர்களுக்குத் தெரியாம இருக்கலாம் .... ஒரு வகை பி கிரேட் பி டீம் அல்ல ஆட்டம்தான் அது .... பீகாரில் உண்டு ..... பணம் படைத்த சமூக விரோதிகளால் நடத்தப்படுகிறது ..... ஆட்ட முடிவில் பெண்ணின் மீது கரன்சி நோட்டுக்களை வீசுவார்கள் .... தேவைப்பட்டால் அடுத்த கட்டத்துக்கும் போவார்கள் ...... அதுதான் முஜ்ரா .... ஆடப்போவது நெல்லிக்காய் மூட்டை கூட்டணி என்றுதான் மோடி குறிப்பிட்டார் ..... அதை பீகார் மக்கள் மீது திருப்பிவிடுகிறார் கார்கே ..... அதாவது தமிழர்களை திருடர்கள் என்று மோடி சொல்லிவிட்டார் ஒருவர் குதித்தாரே .... அவரைப்போலவே ......


Lion Drsekar
மே 26, 2024 17:43

எங்காவது எந்த காட்சியாவது இவர்கள் செய்த சாதனையைப் பற்றி பேசியிருக்கிறார்களா ? ஒவ்வொரு நாளும் இதே போன்று மக்களை தீவிரவாதியாக்குவதிலேயே முழு கவனம் செலுத்துவது போல் பேசுவதை முதலில் இவர்கள் தவரிக்க வேண்டும், வந்தே மாதரம்


Rvelmurugan
மே 26, 2024 16:49

பெருசு காங்கிரஸ் ஜெயிக்க து


மேலும் செய்திகள்







புதிய வீடியோ