வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கல்வி நிறுவனங்கள் நடத்தும் காசு....ஊற அடிச்சு ஓலைல போட்டது...எல்லாம் நேரம்...
துணை முதல்வர் சிவகுமார் மகள் ஐஸ்வர்யா, 27. ராம்நகர் கனகபுராவில் ஓட்டு போட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு இல்லை. கல்வி நிறுவனங்களை நடத்துகிறேன். இதில் எனக்கு முழு ஆத்ம திருப்தி உள்ளது. எனது குடும்பத்தில் அப்பா, சித்தப்பா அரசியலில் உள்ளனர். அவர்கள் அரசியலில் தலைவர்களாக உள்ளனர். கல்வி துறையில் எனக்கென ஒரு இடம் பிடிக்க விரும்புகிறேன். எனது சித்தப்பா சுரேஷ் எம்.பி.,யாக இருந்து மக்கள் பணியாற்றி உள்ளார்.அவருக்கு ஓட்டு சேகரித்தேன். இதில் என்ன தவறு உள்ளது. சித்தப்பா வெற்றி பெறுவார் என்று, எனக்கு நம்பிக்கை உள்ளது. கர்நாடக முதல்வராக சித்தராமையா உள்ளார். முதல்வர் இருக்கை காலியாக இல்லை. முதல்வருக்கு மரியாதை கொடுப்பது, நமது கடமை. அதிர்ஷ்டம் இருந்தால் எனது தந்தை சிவகுமார் முதல்வர் ஆகலாம். எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.
கல்வி நிறுவனங்கள் நடத்தும் காசு....ஊற அடிச்சு ஓலைல போட்டது...எல்லாம் நேரம்...