உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் குடும்ப அரசியல் இல்லையா?

பா.ஜ.,வில் குடும்ப அரசியல் இல்லையா?

தாவணகெரே : ''பா.ஜ.,வில் குடும்ப அரசியல் இல்லையா,'' என்று, தாவணகெரே காங்கிரஸ் வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுன் கேள்வி எழுப்பினார்.பிரபா மல்லிகார்ஜுன் அளித்த பேட்டி:தாவணகெரே லோக்சபா தொகுதியில் பல பிரச்னைகள் உள்ளன. முக்கியமாக இப்பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் தேவைப்படுகிறது. தையல் கற்று கொள்ளும் பெண்கள், பெங்களூரில் உள்ள, ஆயத்த ஆடை தொழிற்சாலைக்கு வேலை தேடி செல்கின்றனர். இங்கு ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் வந்தால், பெண்களுக்கு உதவியாக இருக்கும்.நான்கு முறை பா.ஜ.,வின் சித்தேஸ்வர் எம்.பி.,யாக இருந்து உள்ளார். கண்ணுக்கு தெரியும் பிரச்னைகளை கூட சரி செய்யவில்லை. ஹிந்துத்வா, ராமர் கோவில் பற்றி பேசுகின்றனர். மக்கள் பிரச்னைகளை பற்றி, கொஞ்சமாவது கவலைப்பட வேண்டாமா.வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவின் முயற்சியால் வறட்சி நிவாரணம் ஓரளவு கிடைத்து உள்ளது. காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்வதாக, பா.ஜ., கூறுகிறது. அந்த கட்சியில் குடும்ப அரசியல் இல்லையா. பிறரை பார்த்து கை காட்டுவது எளிது.கட்சி மேலிடம் எனக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளது. இதில் குடும்ப அரசியல் எங்கு உள்ளது. 'கிரஹ லட்சுமி' திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். கல்லுாரி மாணவி நேஹா கொலை வழக்கு, என்னை உலுக்கியது. பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள, தற்காப்பு கலைகளை கற்று கொள்ள வேண்டும். பெண்கள் சமையல் செய்ய மட்டும் தான் லாயக்கு என்று, எனது மாமனார் சாமனுார் சிவசங்கரப்பா கூறவில்லை. அவரது கருத்தை பா.ஜ.,வினர் திரித்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vijay
மே 06, 2024 10:12

இந்தம்மா என்ன பேதலித்து பேசுகிறதா? தேவ கவுடா கட்சி எப்படி பாரதிய ஜனதா காட்சியாகும்? வேணுமின்னா "குடும்ப அரசியல் உள்ள தேவ கவுடா கட்சியோடு பிஜேபி எப்படி கூட்டணி அமைக்கலாம்?" என்று கேள்வி கேட்கலாம் அதை விட்டுட்டு சும்மா பொய்யை பேசிட்டு காங்கிரஸில் உள்ளவர்களுக்கு உளறல் மிக மிக அதிகம் இருக்கிறது


Saai Sundharamurthy AVK
மே 06, 2024 10:10

பாஜகவில் நிச்சயம் குடும்ப அரசியல் கிடையாது. அதாவது உள் அரசியல் வேறு. பதவி அரசியல் வேறு. பாஜக ஆளும் மாநிலங்களில் யாரும் தந்தை, மகன், பேரன் என்று முதலமைச்சர் பதவி வகித்ததில்லை. அதுபோல நாட்டில் யாரும் பிரதமர் பதவி வகித்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள் ஆள்வதால் தான் அதை குடும்ப அரசியல் என்று சொல்கிறோம். இந்த அர்த்தம் புரியாமல் தான் எதிர்க்கட்சிகள் உளறி கொட்டுகின்றன.


GoK
மே 06, 2024 09:51

சாமானுர் சிவசங்கரப்பாவின் சொத்தே, கல்லூரி வெச்சு சம்பாதிச்சது, ஒரு நாலு தலைமுறைக்கு வரும் இப்போ இவை வேற அரசியலுக்கு வந்து சம்பாதிக்கணுமா வெக்கமாயில்லயே


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி