உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனார்த்தன ரெட்டி பொய்யர் சிவராஜ் தங்கடகி ஆவேசம்

ஜனார்த்தன ரெட்டி பொய்யர் சிவராஜ் தங்கடகி ஆவேசம்

கொப்பால் : ''எனது ஆதரவால் தான், ஜனார்த்தன ரெட்டி அமைச்சர் ஆனார்,'' என்று, அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறினார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவோர், கன்னத்தில் அறைய வேண்டும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறினார். இதற்கு பா.ஜ.,வின் ஜனார்த்தன ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அமைச்சராக இல்லாவிட்டால் சிவராஜ் தங்கடகி கன்னத்தில் அறைவேன் என்றும் கூறினார்.இந்நிலையில், கொப்பால் கனககிரியில் நேற்று நடந்த கட்சி தொண்டர்கள் கூட்டத்தில், அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசியதாவது:கடந்த 2008 ல் பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு, நான் உட்பட ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் தான் காரணம். நான் வெற்றி பெற்றதும் எனது வீட்டின் வாசல் முன்பு, ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் காத்து இருந்தனர். அவர்களை தேடி செல்லும் அவசியம் எனக்கு ஏற்படவில்லை. ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவால், ஜனார்த்தன ரெட்டி அமைச்சர் ஆனார்.அவரது தலைவிதி எனக்கு தெரியும். கனககிரி தொகுதி மக்கள் ஆசியால் அமைச்சர் ஆகி உள்ளேன். ஜனார்த்தன ரெட்டியை விட, இரண்டு மடங்கு எனக்கும் பேச தெரியும். ஆனால் பொறுப்பான பதவியில் இருப்பதால், அமைதியாக இருக்கிறேன். அவரை போன்று பலரை பார்த்து உள்ளேன்.மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்ததும், என்னை பற்றி பேசுகிறார். ராஜ்யசபா தேர்தலின் போது, எனது வீட்டை சுற்றி வந்ததை, ஜனார்த்தன ரெட்டி மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். பா.ஜ., பொய் பேசும் கட்சி. அங்கு சேர்ந்து இருப்பதன் மூலம் ரெட்டியும் பொய்யராக மாறி விட்டார்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி