உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சக நாய்க்கு ரத்தம் கொடுத்த ஜீவன்

சக நாய்க்கு ரத்தம் கொடுத்த ஜீவன்

கொப்பால்: மனிதர், மற்றொரு மனிதருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றுவது சகஜம். ஒரு நாய், மற்றொரு நாய்க்கு ரத்தம் கொடுத்து, உயிரை காப்பாற்றியது.கொப்பாலில் வசிக்கும் ஒருவர், லாப்ரடார் இன நாய் வளர்க்கிறார். இதற்கு 10 வயதாகிறது. சில நாட்களுக்கு முன், உடல்நிலை பாதிப்பால் நாய் அவதிப்பட்டது. ஹீமோகுளோபின் சக்தி குறைந்தது. உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.டாக்டர்கள் கொப்பால் நகரில், நாய்களுக்கு ரத்ததானம் செய்யும் நாய்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டனர். அவர்களின் நாய்களின் ரத்த வகையை பரிசோதித்தனர்.இவற்றில் பேராசிரியர் பசவராஜ் பூஜாரின் 3 வயதான, 'டாபர்மென்' இன வளர்ப்பு நாயின் ரத்தம் ஒத்து போனது. இந்த நாயின் ரத்தம், உடல் நலமில்லாத நாய்க்கு செலுத்தப்பட்டது.நாயின் கழுத்து பகுதியில் இருந்து, ரத்தம் எடுக்கப்பட்டது. நாய்களின் எடையை பரிசோதித்து, அவற்றின் எடையில் 10 சதவீதம் ரத்தம் மட்டும் பெறலாம். அதன்படியே டாபர்மென் நாயின் உடலில் இருந்து, ரத்தம் எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி