உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக அரசின் 2020ம் ஆண்டின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

கர்நாடக அரசின் 2020ம் ஆண்டின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

பெங்களூரு; கர்நாடக அரசின் 2020ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக பிரஜ்வல் தேவராஜ், சிறந்த நடிகையாக அக் ஷதா பாண்டவபுரா தேர்வாகி உள்ளனர்.கர்நாடக அரசின் 2020ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகளை யார், யாருக்கு வழங்க வேண்டும் என்பதை தேசிய விருது பெற்ற இயக்குனர் லிங்கதேவரு தலைமையிலான குழுவில் இடம் பெற்று இருந்த பத்திரிகையாளர் பத்மா ஷிவமொக்கா, இயக்குனர் உமேஷ் நாயக், மூத்த நடிகை பத்மா வசந்தி உள்ளிட்டோர் தேர்வு செய்தனர். இதற்கான பட்டியல் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.சிறந்த திரைப்படம்:1.பிங்கி எல்லி2.வர்ண படலா3.ஹரிவ நதிகே, மையெல்லா காலுசிறந்த சமூக நல திரைப்படம்:1.கிலியு பஞ்சரதொல்லில்லா2.ஈ மண்ணுசிறந்த பொழுது போக்கு திரைப்படம்:போர் வால்ஸ்சிறந்த குழந்தைகள் திரைப்படம்:பதகாசிறந்த கர்நாடக மொழி திரைப்படம்:ஜீட்டிகே (துளு)சிறந்த நடிகர்:பிரஜ்வல் தேவராஜ் - பிங்கி எல்லிசிறந்த நடிகை:அக் ஷதா பாண்டவபுரா - பிங்கி எல்லி சிறந்த அறிமுக இயக்குனர்:கணேஷ் ஹெக்டே - நீலி ஹக்கிசிறந்த துணை நடிகர்:ரமேஷ் பண்டிட் - தலேதண்டாசிறந்த துணை நடிகை:மஞ்சுளம்மா - தண்டபுராணாசிறந்த கதை:சசிகாந்த் கட்டி - ராஞ்சிசிறந்த திரைக்கதை:ராகவேந்திர குமார் - சாந்தினி பார்சிறந்த வசனம்:வீரப்பா மரலவாடி - ஹுவின ஹாராசிறந்த ஒளிப்பதிவு:அசோக் காஷ்யப் - தலேதண்டாசிறந்த இசை அமைப்பாளர்:ககன் படேரியா - மால்குடி டேஸ்சிறந்த படதொகுப்பு:நாகேந்திர உஜ்ஜானி - சட்டம் 1978சிறந்த குழந்தை நட்சத்திரம்- :மாஸ்டர் அகில் அன்யாரி - தண்ட புரானாசிறந்த குழந்தை நட்சத்திரம்:பேபி ஹிதாய்ஷி பூஜார் - பருசிறந்த கலை இயக்கம்:குணசேகர் - பிச்சுஹட்டிசிறந்த பாடலாசிரியர்கள்:கார்கி கரேகக்லு - பாடல்: மனுவு மடகாடே, படம்: பர்ஜன்யாசச்சின் ஷெட்டி கும்ப்ளே - பாடல்: தரியோடு சோட்டக்காடி, படம்: ஈ மந்துசிறந்த பின்னணி பாடகர்:அனிருத் சாஸ்திரி - ஆச்சார்யா ஸ்ரீ சங்கர்சிறந்த பின்னணி பாடகி:அருந்ததி வசிஷ்டா - தந்த புராணம்சிறந்த ஜுரி விருது:சஞ்சாரி விஜய்ஆடை வடிவமைப்பு:வள்ளி - சரவர்ஜாசிறந்த குணசித்திர நடிகர்:விஸ்வாஸ் - அரபிசிறந்த தயாரிப்பு மேலாளர்:சம்பகடம பாபு - கன்னடிகாமுதல் சிறந்த திரைப்படத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு, 50 கிராம் தங்கப்பதக்கம்; இரண்டாவது சிறந்த படத்திற்கு 75,000 ரூபாய் ரொக்கம், 100 கிராம் வெள்ளிப்பதக்கம்; மூன்றாவது சிறந்த படத்திற்கு 50,000 ரூபாய் ரொக்கம், 100 கிராம் வெள்ளிப்பதக்கம். சிறப்பு சமூக அக்கறை விருதுக்கு 75,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 100 கிராம் வெள்ளி பதக்கம். சிறந்த நடிகர், நடிகைக்கு தலா 20,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 100 கிராம் வெள்ளி பதக்கம். ஜுரி விருதுக்கு தேர்வாகி உள்ள சஞ்சாரி விஜய், விபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ