உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக சட்ட மேலவை தேர்தல்  காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு

கர்நாடக சட்ட மேலவை தேர்தல்  காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையின் ஆறு தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். தற்போதைய ஒரு எம்.எல்.சி.,க்கும், இரண்டு முன்னாள் எம்.எல்.சி.,களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சட்ட மேலவையின் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளின் ஆறு எம்.எல்.சி., பதவிகளுக்கு, ஜூன் 3ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ., - ஐந்து தொகுதிகளிலும், ம.ஜ.த., ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. பா.ஜ., வேட்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர்.ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தென் மேற்கு ஆசிரியர் தொகுதிக்கு இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கிடையில், ஆறு தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி, வடகிழக்கு பட்டதாரி தொகுதி - தற்போதைய எம்.எல்.சி., சந்திரசேகர் பாட்டீல்; பெங்களூரு பட்டதாரி தொகுதி - ராமோஜி கவுடா; கர்நாடக தென் கிழக்கு ஆசிரியர் தொகுதி - சீனிவாஸ்; கர்நாடக தென் மேற்கு ஆசிரியர் தொகுதி - மஞ்சுநாத்.கர்நாடக தென் மேற்கு பட்டதாரி தொகுதி - முன்னாள் எம்.எல்.சி., ஆயனுார் மஞ்சுநாத்; தெற்கு ஆசிரியர் தொகுதி - முன்னாள் எம்.எல்.சி., மரிதிப்பேகவுடா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜூன் 3ம் தேதி மேலவையின் ஆறு தொகுதிகளுக்கு தேர்தல் நடப்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.இதற்கிடையில், வெற்றி வியூகம் வகுப்பது குறித்து, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், முக்கிய பிரமுகர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ