உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேதார்நாத் கோவில் மே 2ல் திறப்பு

கேதார்நாத் கோவில் மே 2ல் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ருத்ரபிரயாக்: உத்தரகண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் மினி சார்தாம் என அழைக்கப்படுகின்றன. இமயமலையில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவில்கள் குளிர்காலத்தில் மூடப்பட்டு கோடையில் கோவில் நடை திறக்கப்படும். இந்த ஆண்டு கேதார்நாத் கோவில் நடை மே 2ம் தேதி காலை 7:00 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்ரிநாத், கேதார்நாத் கோவில் கமிட்டி முதன்மை நிர்வாக அதிகாரி விஜய் பிரசாத் கூறியதாவது:கேதார்நாத் கோவில் நடை மே 2ல் திறக்கப்படும். அதேபோல் பத்ரிநாத் கோவில் நடை மே 4லிலும், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில் அக் ஷய திருதியை நாளான ஏப்ரல் 30ல் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை