மேலும் செய்திகள்
GEN Z வாக்காளர்களை தூண்டி விடும் ராகுல்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 4
சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதியதில் 8 பேர் பலி
3 hour(s) ago
பெங்களூரு: லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் தொகுதிகளில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பார்வையை திருப்பி உள்ளனர். அந்தந்த தொகுதிகளுக்கு பிரசாரம் செய்ய, தங்களின் பரிவாரங்களுடன் படையெடுக்கின்றனர்.கர்நாடகாவின் 14 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஓட்டுப்பதிவு முடிந்தது. இரண்டாம் கட்டமாக, மே 7ல் வட மாவட்டங்களின் லோக்சபா தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது, இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்கு தயாராகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் எம்.பி., ராகுல், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட மற்ற தலைவர்கள் தங்களின் பரிவாரங்களுடன், வட மாவட்டங்களுக்கு படை எடுக்கின்றனர்.தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில், ஷிவமொகா, தாவணகெரேவை தவிர, மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், பா.ஜ., இடையே நேரடி போட்டி எழுந்துள்ளது. ஷிவமொகாவில் ஈஸ்வரப்பா, தாவணகெரேவில் வினய் குமார் மும்முனை போட்டிக்கு காரணமாகி உள்ளனர்.கர்நாடகாவின் இரண்டாம் கட்ட தேர்தலில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ஜெகதீஷ் ஷெட்டர், பகவந்த் கூபா, ஸ்ரீராமுலு உட்பட முக்கிய தலைவர்களின் அரசியல் எதிர்காலம் அடங்கியுள்ளது. அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா, அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் மகள் சம்யுக்தா, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மகன் சாகர் போன்ற இளம் தலைவர்களின் எதிர்காலத்தையும் முடிவு செய்யும்.இதுபோன்று முதல்வர் சித்தராமையா, உத்தரகன்னடாவின் குமட்டா, முன்டகோடாவில் பிரசாரம் செய்து ஓட்டுக் கேட்பார். நாளை பாகல்கோட்டில் பிரசாரம் செய்வார்.
பிரதமர் மோடி, பிரசாரத்துக்காக, இரண்டு நாட்கள் வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். லிங்காயத்கள் அதிகமுள்ள பெலகாவி, சிர்சி, தாவணகெரேவில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்.இன்று மாலை, விஜயநகராவின் ஹொஸ்பேட் நகருக்கு பிரதமர் வருகிறார். புனித் ராஜ்குமார் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. இங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசி, பல்லாரி, கொப்பால், ராய்ச்சூர் தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். இங்கு 25,000 இருக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளன. முதன் முறையாக, பிரதமர் ஹொஸ்பேட்டு வருகிறார்.நாளை பாகல்கோட் செல்கிறார். பிரதமரின் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை பா.ஜ., தலைவர்கள் செய்கின்றனர். ஹொஸ்பேட் சுற்றுப்பகுதிகளில் உள்ள தொண்டர்கள், ஞாயிறு மாலை 4:00 மணிக்கே நிகழ்ச்சி இடத்துக்கு வர வேண்டும். பிரதமர் செல்லும் வரை, யாரும் எழுந்து செல்ல கூடாது என, உத்தரவிட்டுள்ளனர்.
2 hour(s) ago | 4
3 hour(s) ago