உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 பா.ஜ., எம்எல்ஏ.,க்களை தூக்குங்க; ஆட்சி அமைங்க: அகிலேஷ் யாதவ் கொடுத்த "ஆபர்"

100 பா.ஜ., எம்எல்ஏ.,க்களை தூக்குங்க; ஆட்சி அமைங்க: அகிலேஷ் யாதவ் கொடுத்த "ஆபர்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி., பா.ஜ.,வுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், '100 எம்.எல்.ஏ.,க்களை கொண்டு வந்து ஆட்சி அமைக்கவும்' என எக்ஸ் சமூகவலைதளத்தில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சூசகமாக பதிவிட்டுள்ளார்.உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க 202 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு வேண்டும். தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ., பக்கம் 255 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தற்போது உ.பி பா.ஜ.,வுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததுடன், சறுக்கலை சந்தித்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை மாற்ற, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.

அகிலேஷ் கொடுத்த 'ஆபர்'

இந்நிலையில், இன்று (ஜூலை 18) 'பருவமழை சலுகை, 100 எம்.எல்.ஏ.,க்களை கொண்டு வந்து ஆட்சி அமைக்கவும்' என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சூசகமாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.பா.ஜ., ஆட்சியை கவிழ்க்க அகிலேஷ் யாதவ் திட்டம் தீட்டி வருகிறார். இதனால் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை அகிலேஷ் தனக்கு ஆதரவாக மாற்ற, களத்தில் இறங்கி உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Vrucodara
ஜூலை 20, 2024 19:06

இவனெல்லாம் ஒரு தலைவன் இவன் பின்னால் ஒரு கூட்டம்


Nandakumar Naidu.
ஜூலை 19, 2024 00:48

இவன் ஒரு தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதி. இவனும் இவன் அப்பனும் தான் தேச, சமூக மற்றும் ஹிந்து விரோத பயங்கரமான முஸ்லிம் ரவுடிகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பவர்கள். இவன் ஒரு மோசமான பொறுக்கி மற்றும் ரவுடி. இந்த கட்சியும் நிரந்தரமாக அழிக்க பட வேண்டிய கட்சிகளில் ஒன்று.


V Srinivasan
ஜூலை 18, 2024 19:55

எல்லா கட்சிகளும் இந்த மாதிரி செய்யமுடியும்...பி.ஜே.பி.,யும்,எஸ்.பி.,விருந்து 50 பேரை தூக்கலாம் எம்.பி களையும் தூக்கலாம்.அப்போது தெரியும் அகிலேஷ்–க்கு


தத்வமசி
ஜூலை 18, 2024 18:24

அகிலேசு ஜாக்கிரதை. உங்க கட்சிகாரன தூக்கிடப் போறாங்க. இது காங்கிரஸ் ஆட்சி இல்லப்பா.. இப்போது இருக்ககூடிய எல்லா குறுநில மன்னர் கட்சிகளும் ஒருகாலத்தில் காங்கிரஸ் இருந்தவர்கள் தானே. இன்னைக்கு ஒட்டு கிடைத்து விட்டது என்று ஆடாதப்பா..


GMM
ஜூலை 18, 2024 17:17

கட்சி தாவல் தடை சட்டம் இருக்கு தெரியுமா யாதவ். சட்ட மன்ற பதவி பறிபோகமல் இருக்க 3 ல் 2 பங்கு, 170 உறுப்பினர்கள் கட்சி மாற வேண்டும்? 100 பேர்கள் என்றால் பதவி நீக்கம் இருக்கும். சாதாரண வாக்காளர் தெரிந்த விவரம். முன்னாள் முதல்வர் எவ்வளவு விலை பேசி வருகிறார்.


Narayanan
ஜூலை 18, 2024 16:59

இதைத்தான் மோடிஜிக்கு சொல்கிறோம் ஒரு 50 எம் பி யை எதிர் அணியில் இருந்து தூக்குங்கள் . அப்போ நாயுடு கட்சி எதிர் கட்சிக்கு வந்துவிடும் . காங்கிரெஸ்ஸை நொறுக்கின மாதிரியும் இருக்கும் யாரும் நாக்கில் பல்லை போட்டு தரம் தாழ்த்தி பேச முடியாமலும் போகும் . பிஜேபி எம்பிக்கள் சும்மா வந்துடுவாங்களா கோடியில் சிலவு செய்ய வேண்டும் . முடியுமாஅகிலேஷ் ? பிஜேபி எம்பிக்கள் என்ன உங்க அப்பன்வீட்டு சொத்தா ??


SP
ஜூலை 18, 2024 16:56

அவருடைய தந்தைக்கே துரோகம் செய்தவர்


saravan
ஜூலை 18, 2024 16:21

இந்த கூட்டணி ஒருபோதும் ஆரோக்கியமாக சிந்திக்காது ஜெய் ஹிந்த்


nagendhiran
ஜூலை 18, 2024 16:14

அப்புறம் வாயிலும் வயிற்றுலும் அடித்துகொல்வார்கள்


R SRINIVASAN
ஜூலை 18, 2024 16:11

அகிலேஷ் ஒரு மூன்றாந்தர அரசியல்வாதி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் அரசியல் செய்தால் இந்தியா எப்படி முன்னேறும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை