உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / -பயிர்க் கழிவு அழிப்பு இயந்திரம் வாங்க கடன்: பஞ்சாப் முதல்வர்

-பயிர்க் கழிவு அழிப்பு இயந்திரம் வாங்க கடன்: பஞ்சாப் முதல்வர்

சண்டிகர்:“பயிர்க் கழிவுகளை அழிக்கும் இயந்திரங்கள் வாங்க கூட்டுறவு வங்கிகளில் 50 சதவீத மானியத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம்,” என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறினார்.இதுகுறித்து, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று கூறியதாவது:மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கழிவுகளை அழிக்கும் இயந்திரம் வாங்க கடன் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நெல் வைக்கோலை எரிப்பதைத் தடுக்கும் வகையில் பயிர்க் கழிவுகளை அழிக்கும் இயந்திரங்களை விவசாயிகள் எளிதாக வாங்கச் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.இந்த திட்டம் சண்டிகர் மற்றும் மாவட்டங்களில் 802 கூட்டுறவு வங்கிக் கிளைகளில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவை வாயிலாக விவசாயக் கருவிகள் வாங்க 80 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல, பயிர்க் கழிவு அழிப்பு இயந்திரத்துக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ