உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலில் தோற்றேன்: முதல்வர் ஆனதாக சித்து பெருமிதம்

லோக்சபா தேர்தலில் தோற்றேன்: முதல்வர் ஆனதாக சித்து பெருமிதம்

கொப்பால்: ''லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோற்று போனதால், முதல்வர் ஆனேன்,'' என்று சித்தராமையா பெருமிதமாக கூறினார்.கர்நாடக முதல்வர் சித்தராமையா. கடந்த 1983 முதல் 2023 வரை 13 தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளார். இதில் 12 சட்டசபை தேர்தல். ஒன்று லோக்சபா தேர்தல். இதில், மூன்று முறை சட்டசபை தேர்தலிலும், ஒரு முறை லோக்சபா தேர்தலிலும் தோற்றுள்ளார்.

ராஜினாமா

கடந்த 1989 ல் நடந்த லோக்சபா தேர்தலில் கொப்பால் தொகுதியில் போட்டியிட்ட, ம.ஜ.த.,வின் பசவராஜ் பாட்டீல் அன்வாரி வெற்றி பெற்றார். ஆனால் 1991 ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் இணைந்தார்.அந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக பசவராஜ் பாட்டீல் அன்சாரி போட்டியிட்டார். ம.ஜ.த., சார்பில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

தோல்வி

மைசூரு மாவட்டத்தை சேர்ந்த சித்தராமையாவை, கொப்பாலில் நிற்க வைத்தது ம.ஜ.த., மேலிடம். அந்த தொகுதியில் குருபர், முஸ்லிம்கள் சமூக ஓட்டுகள் அதிகமாக இருப்பதால், ஓட்டுகளை ஒருங்கிணைத்து, அவர் வெற்றி பெறுவார் என்று நினைத்தனர். ஆனால் 11,197 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். அதன்பின்னர் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடவே இல்லை.இந்நிலையில் கொப்பால் கனககிரியில் நடந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசுகையில், ''நல்லவேளை லோக்சபா தேர்தலில் நான் வெற்றி பெறவில்லை. ''எம்.பி., ஆகி இருந்தாலும், பதவியை ராஜினாமா செய்து இருப்பேன். தோற்று போனதால், இரண்டு முறை முதல்வர் ஆனேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை