உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோர்ட்டில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.200 அபராதம்; லக்னோ கோர்ட் உத்தரவு

கோர்ட்டில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.200 அபராதம்; லக்னோ கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: சாவர்க்கர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் ஆஜராகாத காங்., எம்.பி., ராகுலுக்கு ரூ.200 அபராதம் விதித்து லக்னோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா அகோலா மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்ட காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல், சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பாக வக்கீல் நிருபேந்திர பாண்டே என்பவர் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு லக்னோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மார்ச் 5ம் தேதி ராகுலை நேரில் ஆஜராக கூடுதல் தலைமை நீதிபதி அலோக் வர்மா உத்தரவிட்டிருந்தார். ஆனால், கோர்ட்டில் ராகுல் ஆஜராகவில்லை. மாறாக, அவரது சட்டக் குழுவினர் ராகுல் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், அவதூறு வழக்கில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்.,14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

MURALIKRISHNAAN
மார் 07, 2025 10:19

பாவம் பப்பு 200 க்கு திண்டாட்டம்


பேசும் தமிழன்
மார் 06, 2025 19:43

இது என்ன அநியாயம்.... 200 ரூபாய் அபராதம் கட்ட..... பப்பு எங்கே போவார்.... அய்யோ பாவம்..... இதெல்லாம் பிஜெபி கட்சியின் பழிவாங்கும் செயல் என்று..... நம்ம அடிமைகள் கூவுவார்கள் பாருங்கள்!!!!


ராமகிருஷ்ணன்
மார் 06, 2025 16:48

ராவுலு என்ன திமுக ஊ பி யா 200 ரூபாய் அபராதம் போடுவதற்கு. இதற்கு மேலும் அசிங்கம் படுத்த வேண்டாம். கோர்ட் கேவலப்படுத்தி தண்டித்து விட்டது என்று நினைக்கிறேன்.


என்றும் இந்தியன்
மார் 06, 2025 16:17

ஐயோ அபராதம் ரூ 200 கோடி இருந்தால் தான் அவருடைய லெவெலுக்கு மதிப்பு இப்படி அவரை பிச்சைக்கார லெவெலுக்கு கொண்டு வந்த லக்னோ கோர்ட்டை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்


Rajarajan
மார் 06, 2025 16:08

முதலில் இவர் இந்திய ப்ரஜெயா இல்லையானு கண்டுபிடிச்சி சொல்லுங்க சார் ப்ளீஸ்.


visu
மார் 06, 2025 15:56

ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைப்பு எப்படியும் சாவதெற்க்குள் தீர்ப்பு வழங்கி விடலாம்


SUBRAMANIAN P
மார் 06, 2025 14:02

எவனையும் கமெண்டுல காணோம்..


SUBRAMANIAN P
மார் 06, 2025 13:45

இப்படி அபராதம் போட்டா மைனர் 1 லட்சம் கட்டி அட்வான்ஸ் புக்கிங்குல கோர்ட்டுல ஆஜராகுவதிலிருந்து எஸ்கெப்பு ஆகுவாரே. நல்ல சட்டம். நல்ல வக்கீல்கள், நல்ல நீதிபதிகள்.. நல்ல நாடு.. நல்ல மக்கள். நாசமாப்போக...


Ramalingam Shanmugam
மார் 06, 2025 13:03

வெட்கப்படனும்


Ramalingam Shanmugam
மார் 06, 2025 13:02

கொலிஜியம் முறை இந்தியாவின் சாபக்கேடு.


முக்கிய வீடியோ