உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பணியாளர் போட்டி தேர்வுகளை மராத்தியில் நடத்த மஹா., அரசு முடிவு

அரசு பணியாளர் போட்டி தேர்வுகளை மராத்தியில் நடத்த மஹா., அரசு முடிவு

மும்பை :“மஹாராஷ்டிர அரசு பணியாளர்கள் தேர்வு ஆணைய தேர்வுகள் அனைத்தும் மராத்தி மொழியில் நடத்தப்படும்,” என, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுகளில், வேளாண் மற்றும் பொறியியல் துறை பணிகளுக்கான தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவது குறித்து, சிவசேனா உத்தவ் பிரிவு எம்.எல்.ஏ., மிலிந்த் நர்வேக்கர், சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு, முதல்வர் பட்னவிஸ் அளித்த பதில்:பொதுவாக மாநில அரசு பணிகளுக்கான தேர்வு, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. வேளாண் மற்றும் பொறியியல் துறை பணிகளுக்கான ஒருசில தேர்வுகளை மட்டும் ஆங்கிலத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.அந்த தேர்வுகளுக்கான பாடப் புத்தகம் மராத்தியில் இல்லாததே அதற்கு காரணம். அந்த பாடப் புத்தகங்களை மராத்தியில் தயார் செய்யும் பணியை மாநில அரசு துவக்கிஉள்ளது.பொறியியல் படிப்புகளை மராத்தியில் நடத்த புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. எனவே, மாநில அரசு பணியாளர்கள் தேர்வு ஆணைய தேர்வுகள் அனைத்தும் மராத்தி மொழியிலேயே நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

'ஏர்டெல்' ஊழியர் பேச்சால் சர்ச்சை

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த நபர், சேவை குறைபாடு குறித்து புகார் அளிப்பதற்காக, 'ஏர்டெல்' தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை மையத்திற்கு சென்றார். அங்கு பணியாற்றும் பெண்ணிடம் இவர் மராத்தியில் பேசினார். அந்த பெண்ணுக்கு மராத்தி தெரியாததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, 'நான் ஏன் மராத்தி பேச வேண்டும்? மஹாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும் என விதி உள்ளதா? ஹிந்துஸ்தானில் யாரும் எந்த மொழியிலும் பேச உரிமை உள்ளது' என்றார்.இந்த உரையாடலை, 'வீடியோ' பதிவு செய்த வாடிக்கையாளர், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். 'மஹாராஷ்டிராவையும், மராத்தியர்களையும் அவமதித்த ஊழியரின் செயலுக்காக ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என மாநில பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

अप्पावी
மார் 14, 2025 15:32

மும்பை இந்திக்காரங்க ஆதிக்கத்துக்குப் போய் ஒரு நூறு நூத்தம்பது வருஷமாயிருச்சு. இனிமே எப்போ மராத்தியை கொண்டுவந்து... சும்மா கொஞ்ச நாள் ஜல்லியடிச்சிட்டு இந்தி ஜிந்தாபாத் தான்.


தமிழ்வேள்
மார் 14, 2025 11:31

மொழிவாரி மாநில அமைப்பையே கலைத்து பழைய முறையில் மாகாண முறையில் அமைக்கப்படவேண்டும் ..ஒவ்வொரு மாகாணத்த்திலும் மூன்று அல்லது நான்கு மொழிகள் பிரதிநிதித்துவம் பெறும் .ஏதாவது ஒரு மொழிக்காரன் ஆதிக்கம் செலுத்த முயன்றால் ,மீதமுள்ள மொழிக்காரர்கள் தாமாகவே ஒன்று கூடுவதால், ஆதிக்க மொழிக்காரன் மைனாரிட்டி ஆகிவிடுவான்..தனிநாடு புத்தி இல்லாமல் போகும் ...மேலும் மதவெறியும் இல்லாமலாகும் .ஒற்றுமை ஓங்கும் ..எனவே பழையபடி பிராவின்ஸ் முறை தேவை ..மொழிவழி மாநிலங்கள் பிரச்சினை தரும் என்று அன்றே சொன்னவர் ராஜாஜி .....


ஆரூர் ரங்
மார் 14, 2025 10:51

60 ஆண்டுகளாகவே எல்லா( தமிழகம் புதுவை தவிர்த்து) மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கைகள் ஹிந்தியில் மட்டுமே அனுப்பப்படுகின்றன. மராத்தி மட்டுமே அறிந்த அலுவலர்கள் பாடு திண்டாட்டமாக இருக்கும் . மொழிவெறி அழிவில் விடும்.


xyzabc
மார் 14, 2025 10:44

இன்னொரு திராவிட மாடலா ?


Sudha
மார் 14, 2025 10:32

நாடு பின்னோக்கி போய் கொண்டிருக்கிறது


பாமரன்
மார் 14, 2025 10:13

லேட்டாக இருந்தாலும் நல்ல முடிவு. மாநில மொழி மராத்தியில் எழுத முடியாத தேர்வுகளை ஆங்கில ஆப்ஷனுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது மராத்தி அரசு. இது புரியாமல் பகோடாஸ் எழுதுதுக. அட அப்ரசண்டிகளா இரண்டு மொழிகளில் அதாவது ஆங்கிலம் மற்றும் மராத்தியில் எழுத வழிவகை செய்யறாங்க. அதாவது ஹிந்திக்கு நோ என்ட்ரி... ஒழுங்கா படிச்சிட்டு எழுதுங்கய்யா... தமிழ் நாட்டில் இதெல்லாம் சங்க காலத்தில் இருந்தே இருக்கு....


raja
மார் 14, 2025 08:31

தமிழகத்தில் தமிழில் மட்டும் தான் தேர்வு எழுத வேண்டும் என்று இந்த திராவிட அரசு கொண்டுவராது அப்படி கொண்டுவந்தால் திராவிடர்கள் என்று அவர்களால் மட்டும் அழைக்க படும் கன்னடர்கள், தெலுங்கர்கள் மலையாளிகள் வேலை வாய்ப்பு பெறுவது கடினம் என்று தமிழனை திராவிடன் என்று ஏமாற்றும் கூட்டத்துக்கு நன்கு தெரியும்...


Sampath Kumar
மார் 14, 2025 08:00

மிக சரியான முடிவு சார் பாராட்டுகின்றோம் அவர்கள் தாய்மொழியை உயர்த்தி பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம் மத்திய அரசின் மடத்தனமான கொள்கைக்கு ஏதிராக நாம் அனைவரும் போராடவேண்டும்


vels
மார் 14, 2025 10:47

பாதி மராட்டி அழிந்து விட்டது இனியாவது இரு மொழி கொள்கையில் இருந்து பிழைக்க பாருங்கள்


J.V. Iyer
மார் 14, 2025 04:16

அப்படிப்போடு. இப்படித்தான் ஒவ்வொரு மாநிலமும் அவர்களின் மொழிகளை பாதுகாக்கவேண்டும். வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் நடக்கும் காட்டாட்சியை ஒழிக்க முன்வந்து தமிழகத்திற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுக்கவேண்டும். அது சரி, பெரியார் வழியில் திராவிடம் ஏன் தமிழை மட்டும் ஒழிக்க பாடுபடுகிறது? அவர்களுக்கு தென்னிந்திய மற்ற தென் இந்திய மொழிகள் கண்ணில் படவில்லை?


Ray
மார் 14, 2025 07:43

உள்ளூரில் என்னவெல்லாம் நடைபெறுகிறதென்றே அறியாத கிணற்றுத் தவளையிது என்று தெரிகிறது. அப்படிப்போடு எங்கெங்கோ உள்ளவர்களெல்லாம் விழித்துக் கொள்ள வைத்தது இந்த ஸ்டாலீன்தான் என்று ஒப்புக்கொண்டது நல்லது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று நடப்பது டில்லிஆட்சியார்களே. UNCIVILIZED என்று சொன்னது நமக்கு உறைக்கவில்லையெனில் நாம் அசல் தமிழனில்லை.


raja
மார் 14, 2025 08:28

கொத்தடிமையே அவர்கள் தமிழனை சொல்லவில்லையே... திருட்டு திராவிடர்களை தானே நாகரீகம் இல்லாதவர்கள் என்று கூறினார்கள் அப்புறம் ஏன் தமிழன் அதுக்கு பொங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய்... இப்போ தமிழர்கள் தமிழன் வேறு திருட்டு திராவிடன் வேறு என்று புரிந்து கொண்டார்கள்....


Kasimani Baskaran
மார் 14, 2025 03:42

சிறப்பு... தாய்மொழியில் படிப்பது சிந்திப்பதை எளிதாக்கும்.


Appa V
மார் 14, 2025 06:39

பெயரையே தமிழில் பதிவிட தெரியவில்லை ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை